Earthquake in bay of bengal: வங்கக் கடலுக்குள் திடீர் நிலநடுக்கம்: வங்கதேசத்தின் பெரும்பகுதி குலுங்கியது
தென்மேற்கு வங்கக்கடலுக்குள், ஒடிசாவின் பூரி கடற்கரைக்கு அருகே இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வங்கதேசத்தின் பல பகுதிகள் குலுங்கின.
தென்மேற்கு வங்கக்கடலையொட்டிய பகுதியில், ஒடிசாவின் பூரி கடற்கரைக்கு அருகே இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வங்கதேசத்தின் பல பகுதிகள் குலுங்கின.
தென் மேற்கு வங்கக்கடலில் ஒடிசாவின் பூரிநகரில் இருந்து 421 கி.மீ தொலைவிலும், புவனேஷ்வர் நகரில் இருந்து 434 கி.மீ தொலைவிலும், கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 8.32 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலஅதிர்பு 5.2 என்ற ரிக்டர் அளவில் பதிவானது என்று தேசிய புவியியல் கண்காணிப்புமையம் தெரிவித்துள்ளது.
'என்னுடைய உயிரின் ஒருபகுதி இந்தியா' ! கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது
வங்கதேசத்தில் வெளிவரும் டாக்கா ட்ரிபியூன் கூறுகையில் “ இன்று காலை 9.05 மணிக்கு தலைநகர் டாக்கா, வங்கதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் திடீரென குலுங்கின. டாக்காவில் இருந்து தென்மேற்கில் 529 கி.மீ தொலைவிலும், காக்ஸ்பசாரில் இருந்து தென்மேற்காக 340கி.மீ தொலைவிலும், சிட்டகாங்கில் இருந்து 397 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் இந்தியவுக்கு மிக அருகே தென் மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டது.
ஜாம்பி வைரஸ் பற்றி முன்னரே கணித்த பாபா வாங்கா..!! அப்போது என்ன சொன்னார் தெரியுமா?
இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான சேதங்கள் ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை. கடற்கரைப் பகுதியிலும் எந்தவிதமான சேதங்களும், பாதிப்பும் இல்லை. இந்த பூகம்பத்தால் சுனாமியை உருவாக்குமா என்று என்சிஎஸ் தெரிவிக்கவில்லை.