Asianet News TamilAsianet News Tamil

Sundar Pichai: 'என்னுடைய உயிரின் ஒருபகுதி இந்தியா' ! கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது

என்னுடைய உயிரின் ஒருபகுதி இந்தியா, உலகில் எந்த மூலைக்குச்சென்றாலும் நான் இந்தியாவை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்று பத்மபூஷன் விருது பெற்ற கூகுள் மற்றும் அல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Sunder Pichai, CEO of Google and Alphabet, received the prestigious Padma Bhushan award.
Author
First Published Dec 3, 2022, 12:12 PM IST

என்னுடைய உயிரின் ஒருபகுதி இந்தியா, உலகில் எந்த மூலைக்குச்சென்றாலும் நான் இந்தியாவை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்று பத்மபூஷன் விருது பெற்ற கூகுள் மற்றும் அல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

2022ம் ஆண்டுக்கான வர்த்தகம் மற்றும் தொழிற்துறை பிரிவில் குடிமகனுக்க 2வது உயர்ந்த விருதான பத்மபூஷன் விருது கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு அறிவிக்கப்பட்டது.ஆனால், அந்த விருதை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற சுந்தர் பிச்சை வரமுடியாதசூழல் இருந்தது.

https://tamil.asianetnews.com/world/china-cautions-the-us-not-to-meddle-in-its-relations-with-india-pentagon-report-rm5nl5
இதையடுத்து, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்து, சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று நடந்த எளிமையான நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சைக்கு இந்த விருதை வழங்கினார். சுந்தர் பிச்சையின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள்,உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பத்மபூஷன் விருதைப்பெற்றுக் கொண்ட சுந்தர் பிச்சை பேசியதாவது: 


பத்மபூஷன் விருது வழங்கிய இந்திய அ ரசுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றியுள்ளவனராக இருப்பேன், இந்த விருது எனக்கு மிகப்பெருமை அளிக்கிறது. இந்தியா என் உயிரின் ஒருபகுதி. கூகுள் நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே சிறந்த நட்புறவு தொடர்வதை முன்னெடுத்துச் செல்வேன். தொழில்நுட்பம் மக்களுக்கு சென்றடைய இருவரும் இணைந்து செயல்படுவோம்.

ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு சொல்லத் தேவையில்லை: ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் பேச்சு
இந்தியா என் உயிரின் ஒருபகுதி,நான் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு இந்தியாவை கொண்டு செல்வேன். இந்தியாவில் கற்றலையும், அறிவார்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தது எனக்கு அதிர்ஷ்டம். 
இந்தியாவில் கொண்டுவரப்பட்ட புதிய தொழில்நுட்பங்களான யுபிஐ, டிஜிட்டல் பேமெண்ட், வாய்ஸ் தொழில்நுட்பம் போன்ற இந்திய மக்களுக்கு மட்டுமின்றி உலகளவில் மக்களுக்கு உதவுகிறது.


பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா என்ற தொலைநோக்குத் திட்டம் நீண்டகாலத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும்.  இந்தியாவில் தொடர்ந்து கூகுள் முதலீடு செய்வதை பெருமையாகக் கருதுகிறேன். அரசுடன், வர்த்தகர்களுடன், சமூகத்துடன் இணைந்து செயலாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். டிஜி்ட்டல் பரிமாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர், கிராமங்கள் வரை டிஜிட்டல் பரிமாற்றம் சென்று சேர்ந்துள்ளது.

 

நாம் சிறந்த வாழ்க்கையை வாழ புதிய தொழில்நுட்பம் நமது வீட்டுவாசல் வரை வந்துள்ளது. அந்த அனுபவம் கூகுள் நிறுவனத்தை முன்னோக்கி கொண்டு சென்று, தொழில்நுட்பத்தை வளர்த்து, உலக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வாய்ப்பளிக்கிறது. 

இன்று முதல் ஜி20 நாடுகள் தலைவராக இந்தியா : நம்மால் முடியும்: பிரதமர் மோடி உறுதி


இந்தியா ஜி20 தலைமை ஏற்றுள்ளது மிகஅருமையான வாய்ப்பு. திறந்த, இணைக்கப்பட்ட, பாதுகாப்பான மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய இணையதளத்தை மேம்படுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் ஒருமித்த கருத்தை உருவாக்க இது ஒரு அற்புதமான வாய்ப்பு. உங்களுடன் சேர்ந்து முன்னேற உறுதிபூண்டுள்ளோம் 


இவ்வாறு சந்தர் பிச்சை தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios