Prime Minister Narendra Modi : நேற்று டிசம்பர் 1ம் தேதி துபாயில் நடந்த COP28 கூட்டத்தின் போது, ​​இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பாரத பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்து தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில் பகிர்ந்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோர் COP28, காலநிலை நடவடிக்கை குறித்த உலகளாவிய மாநாட்டில் கலந்து கொண்டபொது எடுத்துக்கொண்ட செல்ஃபி இப்பொது வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியுடன் எடுக்கப்பட்ட செல்ஃபியையும் இத்தாலிய பிரதமர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

சுமார் 2.2 மில்லியன் பாலோவர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்ட இத்தாலியின் பிரதமரான மெலோனி, அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "COP28ல் இரு நல்ல நண்பர்கள்" என்று தலைப்பிட்டு அதை பகிர்ந்துள்ளார். தற்போது அவருடைய இந்த பதிவு பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. 

View post on Instagram

இத்தாலி மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கான முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டியுள்ளார். COP28 உச்சிமாநாட்டின் போது பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்ததாக, பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் வளமான எதிர்காலத்திற்காக கூட்டு முயற்சிகளை தொடருவோம் என்றார் அவர். 

இது தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஸ்வீடன் பிரதமர் கிறிஸ்டெர்சன், துருக்கி அதிபர் எர்டோகன், பார்படாஸ் பிரதமர் மியா மோட்லி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் போன்ற பல முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

Scroll to load tweet…

துபாயில் COP28 உச்சி மாநாடு நவம்பர் 28 முதல் தொடங்கி டிசம்பர் 12 வரை தொடரும். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் இந்த உலகளாவிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டும் இந்த உயர் மட்டப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. 

மண் என்பதே இறுதி.. நாம் அனைவரும் ஒன்றுதான்.. பருவநிலை உச்சி மாநாட்டில் சத்குரு பேச்சு..!

உலக காலநிலை பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிடுவது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக, பிரதமர் மோடி 2015ல் பாரிஸ் மற்றும் 2021ல் கிளாஸ்கோவில் நடந்த கூட்டங்களில் பங்கேற்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில், பிரதமர் மோடி உலகளாவிய தெற்கு நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று பிரதமர் கூறினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.