ஏழு முறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம்-4 விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெறுகிறார். 

பல்வேறு காரணங்களால் ஏழு முறை ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம்-4 (Axiom-4) விண்வெளிப் பயணத்திட்டம் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வரும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையைப் சுபான்ஷு சுக்லா பெறவுள்ளார்.

அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து, இப்பணியை செய்து வருகிறது. இத்திட்டத்தை நாசா விஞ்ஞானி பெக்கி விட்சன் இந்த திட்டத்தை தலைமை ஏற்று வழிநடத்துகிறார். இவருடன் இஸ்ரோ விஞ்ஞானி சுபான்ஷு சுக்லா, போலந்தைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் செல்கின்றனர்.

மொத்தம் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் இவர்கள், சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட்டில் மூலம் இன்று (ஜூன் 25) நண்பகல் 12 மணிக்கு இந்திய வீரர் சுக்லா குழு விண்வெளி நிலையத்திற்கு செல்கிறது. 28 மணிநேர பயணத்திற்கு பிறகு, நாளை (ஜூன் 26) மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடைய உள்ளது. பல்வேறு காரணங்களால் தொடர்ந்து 7 முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது 8வது முறையாக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆக்சியம்-4 திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் இஸ்ரோ விஞ்ஞானி சுபான்ஷு சுக்லா, இந்தியாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை பெறுகிறார்.

சுபான்ஷு சுக்லா யார்?

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோவை சேர்ந்​த சுபான்ஷு சுக்​லா, கடந்த 2006-ல் இந்​திய விமானப்​படை​யில் சேர்ந்தார். 2024-ம் ஆண்​டில் குழு கேப்​ட​னாக பொறுப்​பேற்​றார். இந்த சூழ்​நிலை​யில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோ​வின் ககன்​யான் திட்​டத்​துக்​காக சுபான்ஷு தேர்வு செய்​யப்​பட்​டார். இதற்​காக ரஷ்​யா​வின் யூரி காகரின் விண்​வெளி மையத்​தில்​ சேர்ந்​து இவர் சிறப்​புப் பயிற்​சி பெற்​றார். 41 ஆண்​டு​களுக்​குப் பிறகு விண்​வெளி நிலை​யம் செல்​லும் இந்​தி​யர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்​ளார் என்பது குறிப்பிடத்தக்கது.