செவ்வாய் கிரகத்தில் ‘டோனட்’ வடிவ பாறை.. நாசாவின் Perseverance ரோவர் எடுத்த புகைப்படத்தை பார்த்தீங்களா?
நாசாவின் Perseverance ரோவர் செவ்வாய் கிரகத்தில் எடுத்த டோனட் வடிவ பாறையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.
பூமி மட்டுமின்றி மற்ற கிரகங்கள் தொடர்பாகவும், விண்வெளி தொடர்பாகவும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாசாவின் Perseverance ரோவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தின் படங்களையும் அந்த விண்கலம் அனுப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது Perseverance ரோவர் செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படம் ஒன்றை அனுப்பி உள்ளது.
உலகளவில் பிரபலமான இந்த செயற்கை ஸ்வீட்னர் புற்றுநோயை ஏற்படுத்தக்கடியது? WHO ஆய்வில் அதிர்ச்சி தகவல்..
அந்த புகைப்படத்தில் நடுவில் துளை உள்ள மிகப்பெரிய பாறை உள்ளது. பார்ப்பதற்கு டோனட் வடிவில் இந்த பாறை இருக்கிறது. SETI நிறுவனம் இந்த டோனட் வடிவ பாறையின் படத்தைப் பகிர்ந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம் “Perseverance ரோவரின் சூப்பர் கேம் ரிமோட் மைக்ரோ-இமேஜர் மூலம் இந்த படம் எடுக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே சமீபத்தில் வானியலாளர்கள் செவ்வாய் கிரகத்தில் ஒரு கரடியின் முகத்தை ஒத்த ஒரு அமைப்பைக் கண்டுபிடித்ததனர். இந்த அமைப்பு "கரடியின் கண்களை" உருவாக்கிய இரண்டு பள்ளங்களைக் கொண்ட ஒரு பாறை அமைப்பால் ஆனது என்று ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.
முன்னதாக, ரோவரில் இருந்த மாஸ்ட்கேம்-இசட் கருவியானது செவ்வாய் கிரகத்தின், பெல்வார் கிரேட்டர் பகுதியில் 152 படங்களைச் சேகரித்தது, இது மிகப் பெரிய ஜெஸெரோ பள்ளத்தில் உள்ள பெரிய தாக்கப் பள்ளமாகும். மேலும் சில நாட்களுக்கு முன்பு, நாசா செவ்வாய் கிரகத்தில் நதிகள் இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில், நதியின் தடயங்கள் இருந்த புகைப்படங்க்ளை பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“ பிரதமர் மோடி மிகப்பெரிய நண்பர்..” மேக் இன் இந்தியா திட்டத்தை புகழ்ந்து தள்ளிய ரஷ்ய அதிபர் புடின்..