பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து விவாதித்தார். டிரம்ப், 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். 

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து விவாதித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 26/11 மும்பை தாக்குதல் குற்றவாளியா தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

26/11 மும்பை தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் அமெரிக்காவிடம் இந்தியா தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில், தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடிமகனான ராணா, 2008 மும்பை தாக்குதலுக்கு சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். தற்போது ராணா அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Scroll to load tweet…

மோடியிடம் டிரம்ப் கூறியது என்ன?
பிரதமர் மோடியை சந்தித்த பின் டிரம்ப் கூறுகையில், “மிகவும் ஆபத்தான நபரை நாங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம். இவர் மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்” என்றார். நவம்பர் 2008-ல் மும்பையில் நடந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 18 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்தனர். 

ராணா இந்தியா கொண்டு வரப்படுகிறார்:
அமெரிக்க நீதிமன்றம் ராணாவை நாடு கடத்த அனுமதி அளித்துள்ளதால், அவரை இந்தியா கொண்டுவர வழி பிறந்துள்ளது. இது இந்தியா-அமெரிக்கா இடையேயான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். ராணாவை நாடு கடத்தும் சட்ட நடைமுறைகள் இரு நாடுகளுக்கும் இடையே நிறைவேற்றப்படும். இதன் மூலம் 26/11 தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும், தாக்குதல் குறித்த முழு உண்மையை அறியவும் இந்தியாவுக்கு உதவியாக இருக்கும். 

பிரதமர் மோடி வியாழக்கிழமை அதிபர் டிரம்பை சந்தித்தார். இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். ஜனவரி 20-ல் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். 

பிரான்சில் இரண்டு நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு இரண்டு நாட்களா பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டு இருக்கிறார். நேற்று அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் (DNI) துளசி கப்பார்டு உடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருநாடுகளின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்வின் தொடர்ச்சியாக அதிபர் டொனால்ட் டிரம்பை மோடி சந்தித்தார்.