வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்க நாய்கள்..!! ஆராய்ச்சியாளர்கள் புதிய டெக்னிக்..!!

ஆகவே கொரோனா வைரசுக்கு குறிப்பிட்ட வாசனை என்ன என்பதை கண்டுபிடிப்பதின்  மூலம் இந்த ஆராய்ச்சியின் அடுத்த நிலையை  எட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.

dog will be use for find out virus affected person's - scientist's research says

கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே போராடி வரும் நிலையில் கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டறிவது  மருத்துவ உலகத்திற்கு மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது .  இந்நிலையில் ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் நாட்டில் உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வைரஸ் பாதித்தவர்களை அடையாளம் கண்டு வருகின்றனர் .  குறிப்பாக ஜெர்மனியில்  வெப்பமானியின் (test kit) மூலம் வாரத்திற்கு ஐந்து லட்சம் பேரை பரிசோதித்து வருகின்றது.  தென் கொரியா அமெரிக்கா ,  இத்தாலி ,  ஈரான் போன்ற நாடுகளும் இதையே பாணியை பின்பற்றி வருகின்றனர் .  குறிப்பாக மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இது மிகப் பெரும் சவாலாக இருந்து வருகிறது .  வைரஸ் பாதிப்பை  கண்டறிவதற்கான போதிய கருவிகள் இல்லாத நிலையில் அது பெரும் சவாலாக உள்ளது.  அதேபோல் இந்த வைரஸ் விலங்குகளின் மூலமாகவும் பரவுவதாக சீன விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர் .  

dog will be use for find out virus affected person's - scientist's research says

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை எளிதில் கண்டறிய மோப்ப நாய்களின் மூலம் முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்ற  யோசனை மீண்டும் எழுந்துள்ளது.  டர்ஹாம் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் (LSHTM) உடன்  இணைந்து கொரோனா வைரசால் பாதித்தவர்களை  கண்டறிவதற்கு நாய்களை பயன்படுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்  இவர்கள் ஏற்கனவே மலேரியா புற்றுநோய் மற்றும் பார்க்கின்சன் நோய்களை கண்டறிய நாய்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  அதாவது ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு வாசனை உண்டு எனவும்  எல்.எஸ்.எச்.டி.எம் நோய்க் கட்டுப்பாட்டுத் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் லோகன், தெரிவித்துள்ளார்.  குறிப்பாக மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து  வெளியாகும் வாசனையைக் கொண்டு அவர்களை நாய்களால் கண்டறிய முடியும் என்று ஆராய்ச்சிகள்  மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் .  ஆகவே கொரோனா வைரசுக்கு குறிப்பிட்ட வாசனை என்ன என்பதை கண்டுபிடிப்பதின்  மூலம் இந்த ஆராய்ச்சியின் அடுத்த நிலையை  எட்ட முடியும் என தெரிவித்துள்ளார். 

dog will be use for find out virus affected person's - scientist's research says

இதன் மூலம் கூட்டமாக மக்கள் இருக்கும் இடங்களில் நாய்களை பயன்படுத்துவதன் மூலம் நோய் பாதித்தவர்கள் எளிதில் அடையாளம் காணமுடியும் .  பின்னர் முறையான சோதனைகளின் அடிப்படையில் அதை  உறுதி செய்துகொள்ளலாம்  எனவும் கூறியுள்ளார் . நாய்களுக்கு இந்த பயிற்ச்சி வழங்க ஆறு வாரங்கள் பிடிக்கும் என கூறும் அவர் ,  ஆனால் இந்த முறை தற்போது குறைந்த அளவிலேயே நடைமுறையில் இருக்கிறது எனவும் கூறியுள்ளார் .  ஆனால் இது போன்ற முறைகளின் மூலம் மீண்டும் இந்த நோய் சமூகத்தில் பரவுவதை எளிதில் கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார் . இது மனிதர்களிடம் இருந்து  கண்டுபிடிப்பது மட்டுமின்றி  விலங்குகளின் மூலம் பரவும் நோய்களையும்  நாய்களால் எளிதில் கண்டறிய முடியும் என அவர் தெரிவித்துள்ளார் .
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios