நியூயார்க் நகரில், இனி தீபாவளிக்கு பள்ளி விடுமுறை.. ஆனா இந்த ஆண்டு ஒரு ட்விஸ்ட்..
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் தீபாவளி பண்டிகையை பள்ளி விடுமுறையாக அறிவித்துள்ளது,
இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை என்றால் அது தீபாவளி தான். நாடு முழுவதுமே புத்தாடை, பட்டாசு, இனிப்புகள், பலகாரங்கள் என தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டும். ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தீபாவளி கொண்டாட்டம் என்பது சிறப்பாக இருக்குமா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் தீபாவளி பண்டிகையை பள்ளி விடுமுறை நாட்களில் சேர்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நியூயார்க் நகரத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக, இந்த ஆண்டு முதல் தீபாவளியை பள்ளி விடுமுறையாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனி, தீபாவளி பண்டிகைக்கு நியூயார்க்கில் பள்ளிக்கு விடுமுறை என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து அதிபர் ஜோ பைடன் போட்ட ட்வீட்.. பிரதமர் மோடியின் பதில் என்ன?
மாநில சட்டமன்றம் மற்றும் மாநில செனட் ஆகியவை தீபாவளியை பொதுப் பள்ளி விடுமுறையாக மாற்றுவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளன, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வெளிப்படுத்தினார். மேலும் "இது இந்திய சமூகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து சமூகங்களின் வெற்றியாகும். இது நியூயார்க்கின் வெற்றி,” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த ஆண்டு முதல் பொதுப் பள்ளி விடுமுறையாக தீபாவளி இடம்பெறும் அதே வேளையில், 2023ம் ஆண்டில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூடுதல் விடுமுறை கிடைக்காது. ஆம். 2023 ஆம் ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆகும், அது ஏற்கனவே விடுமுறை என்பதால் இந்த ஆண்டு தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் அருகில் இருந்த நபரின் காதை கடித்த இந்தியர்.. நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கியது?