சிங்கப்பூரில் அருகில் இருந்த நபரின் காதை கடித்த இந்தியர்.. நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கியது?

சிங்கப்பூரில் காதை கடித்த குற்றத்திற்காக 37 வயதான இந்தியர் ஒருவருக்கு  ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

An Indian who bit the ear of a neighbor in Singapore.. What was the court's sentence?

இந்தியாவை சேர்ந்த மனோகர் சங்கர் என்பவர் சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அவர் சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். 47 வயதான மற்றொரு இந்தியரும் அதே குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு மே 19, 2020 அன்று இரவு, மனோகர் அடுக்குமாடி குடியிருப்பில் மாடியில் மது அருந்தி கொண்டிருந்தார் என்றும், அப்போது அருகில் இருந்த நபரை திடீரென வசைபாட தொடங்கி உள்ளார். இதனால் மனமுடைந்த அந்த நபர், மனோகரை திட்டுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இந்தியா-அமெரிக்க உறவுகள் குறித்து அதிபர் ஜோ பைடன் போட்ட ட்வீட்.. பிரதமர் மோடியின் பதில் என்ன?

ஆனால் அதை பொருட்படுத்தாத மனோகர், பின் நாற்காலியில் அமர்ந்திருந்த நபரை காதை கடித்துள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட நபர் எழுந்து நின்று மனோகரின் பிடியில் இருந்து விடுபட முயன்றார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கைகலப்பில் கீழே விழுந்த மனோகருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.

பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து, சண்டையை விலக்கி உள்ளனர்.  அவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளித்தார். குடிபோதையில் இருந்ததால் மனோகர் அப்படியே தரையில் கிடந்துள்ளார். மனோகர் கடித்ததால் பாதிக்கப்பட்டவரின் இடது காது மடலில் 2 செமீ  நீளமுள்ள பகுதியை கடித்துள்ளார். பாதிக்கப்பட்டவர் அடுத்த நாள் செங்காங் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார். பின்னர் மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்ச்சை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கில், மனோகருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனோகருக்கு 1,000 சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மனோகர் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாகவும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிக்கையாளர்.. 9 ஆண்டுகளில் 1 முறை.! திடீர் சிக்கல் - பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios