எல்லை பிரச்சனையை ராஜதந்திர ரீதியில் தீர்க்கும் மோடி அரசு..!! ராஜ்நாத் சிங் அதிரடி..!!

சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஜூன்-6 பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. 

defense minister rajnath singh talk about indo-china border issue

இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரத்தை பொருத்தவரை இந்தியாவின் பெருமை பாதிக்கப்படாமல் இருப்பதை நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி  செய்யும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது மேலும் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது, ஆனால் இந்தியா,  சீனா, பாகிஸ்தான் என்ற எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப்பகுதியான பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன படையினருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருநாட்டு ராணுவ வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து இருநாட்டு உள்ளூர் ராணுவ அதிகாரிகளுக்குமிடையே  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பதற்றம் தணிந்தது, அதேபோல்  மே 9-ஆம் தேதி சிக்கிம் எல்லையான நகுலா பாஸ் பகுதியில் இருநாட்டு படைவீரர்களும் மோதிக்கொண்டனர். 

defense minister rajnath singh talk about indo-china border issue

அதனைத்தொடர்ந்து மே 22-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்து விட்டதாக கூறி  சீனா அங்கு ஏராளமான படைகளை குவிக்க தொடங்கியது, இந்தியாவும் பதிலுக்கு படைகளைக் குவித்துவந்த நிலையில் இருநாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் மே 27-ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும்  இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என ட்ரம்ப் கூறினார். ஆனால் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்க அதிபரின் அறிவிப்பை  புறக்கணித்ததைத் தொடர்ந்து இருநாடுகளும் எல்லை பிரச்சனையை பேசி தீர்க்க முன் வந்தன, இந்நிலையில்  கிட்டத்தட்ட 12 சுற்று பேச்சுவார்த்தைகள்  நடைபெற்றன, ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, இந்நிலையில் 14 கார்ப்பஸ் கமாண்டர் அளவிலான இந்தோ-சீன பேச்சுவார்த்தை சனிக்கிழமை  சீன எல்லைப் பகுதியில் உள்ள  மோல்டோவில் நடைபெற்றது. 14 கார்ப்பஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்  ஹரிந்தர் சிங், சீனாவின் தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் லியு லினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது, இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாஜகவின் மகாராஷ்டிர ஜன சம்வத்  பேரணியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார், 

defense minister rajnath singh talk about indo-china border issue

அப்போது பேசிய அவர்,   இந்திய-சீன  எல்லை பிரச்சனையை பொருத்தவரையில், இந்தியாவின் பெருமையை நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி செய்யும்.  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை நீண்ட காலமாக நடந்து வருகிறது, அதை விரைவில் தீர்க்க விரும்புகிறோம், சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஜூன்-6 பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தத்தில்  நாட்டின் தலைமை வலுவான கைகளில் உள்ளது என்பதை மக்களுக்கு உறுதி படுத்த விரும்புகிறேன். இந்தியாவின் பெருமை மற்றும்  சுயமரியாதை விவகாரத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்திய சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தின் விளக்கத்தை கோரியுள்ளனர், அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,  நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் நான் என்ன கூறினாலும் அதை பாராளுமன்றத்தில் கூறுவேன் என்றும், எப்போதும் மக்களை தவறாக வழிநடத்த மாட்டேன் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios