இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆக பதிவாகியுள்ளது. 

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கி.மீ. தெற்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  

இது ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆக பதிவாகி உள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேபோல், இந்தோனேசியாவில் உள்ள சவும்லாக்கி பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.