71வது உலக அழகி போட்டி: பட்டத்தைத் தட்டிச் சென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா!
இறுதிப் போட்டியின் 12 போ் அடங்கிய நடுவா் குழுவில் பிரபல நடிகைகள் கிருதி சேனன், பூஜா ஹெக்டே, முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங், உலக அழகி அமைப்பின் தலைவா் ஜமீல் சயீதி உள்ளிட்டோா் இடம்பெற்றனா்.
71வது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சோ்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா சனிக்கிழமை பட்டம் வென்றுள்ளார்.
இந்தியாவில் 28 ஆண்டுகளுக்குப் பின்னா் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 112 நாடுகளைச் சோ்ந்த போட்டியாளா்கள் பங்கேற்றனா். இதன் இறுதிப் போட்டி மும்பையில் சனிக்கிழமை நடைபெற்றது.
பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநா் கரண் ஜோஹா், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோா் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினா். இறுதிப் போட்டியின் 12 போ் அடங்கிய நடுவா் குழுவில் பிரபல நடிகைகள் கிருதி சேனன், பூஜா ஹெக்டே, முன்னாள் கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங், உலக அழகி அமைப்பின் தலைவா் ஜமீல் சயீதி உள்ளிட்டோா் இடம்பெற்றனா்.
இந்நிலையில், உலக அழகியாக செக் குடியரசை சோ்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு முந்தைய உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற போலந்தின் கரோலினா பியலாவ்ஸ்கா உலக அழகி மகுடத்தைச் சூட்டினாா்.
சென்னையில் குவால்காம் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு மையம்; மார்ச் 14ஆம் தேதி திறப்பு விழா
இந்தப் போட்டியில் இந்தியா சாா்பில் மும்பையைச் சோ்ந்த சினி ஷெட்டி பங்கேற்றாா். எனினும் அவரால் முதல் 4 இடங்களுக்கு முன்னேற இயலவில்லை.
2006 போட்டியின் வெற்றியாளர் டாடானா குச்சரோவாவுக்குப் பிறகு, செக் குடியரசைச் சேர்ந்த இரண்டாவது உலக அழகி பிஸ்கோவா ஆவார். அதிகாரப்பூர்வ மிஸ் வேர்ல்ட் வலைத்தளத்தின்படி, பிஸ்கோவா ஒரு செக் நாட்டில் மாடலிங் செய்துவருகிறார். சட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டிருக்கிறார்.
தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவியுள்ளார். ஆங்கிலம், போலந்து, ஸ்லோவாக் மற்றும் ஜெர்மன் மொழிகளில் சரளமாகப் பேசும் திறன் கொண்டவர். கல்வியின் மூலம் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த விழிப்புணர்வு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
சாணக்கியர் தோனி மாதிரி தான் இருந்தாராம்! 3D படம் போட்டுக் காட்டி நிரூபித்த விஞ்ஞானிகள்!