"லண்டனில் நடந்த அராஜகம்.. சாதிக் கான் பெருமைப்பட வேண்டும்" - கடுமையாக விமர்சித்த பிரபல கிரிக்கெட் வீரர்!
Kevin Pietersen : லண்டன் நகரில் அடிக்கடி குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாக பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அது குறித்த இந்த வீடியோவில் காணலாம்.
லண்டனில் ரயிலில் பட்டப்பகலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கவலை தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை விக்டோரியா நோக்கிச் செல்லும் ஒரு ரயிலில் ஷார்ட்லேண்ட்ஸ் மற்றும் பெக்கன்ஹாம் இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு "கடுமையான காயங்கள்" ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை நேரில் கண்ட மூன்று பேர் போலீசாரிடம் சாட்சியங்கள் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது X பக்கத்தில், பீட்டர்சன் அந்த கொடூர சம்பவத்தின் வீடியோவை மறுபகிர்வு செய்துள்ளார்.
கப்பல் மோதி இடிந்து விழுந்த அமெரிக்கப் பாலம்! கொத்துக் கொத்தாக நீரில் மூழ்கிய வாகனங்கள்!
லண்டன் ஒரு காலத்தில் மிகவும் அற்புதமான நகரமாக இருந்தது. ஆனால் அதன் நிலை இப்பொது தலைகீழாக மாறிவருகின்றது என்று அவர் தனது பதிவில் கூறினார். லண்டன் தலைநகரில் பட்டப்பகலில் மக்கள் கொள்ளையடிக்கப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளையும் பீட்டர்சன் சுட்டிக்காட்டினார். IPL போட்டிகள் நடந்து வரும் நிலையில், பீட்டர்சன் அதில் வர்ணனையாளராக பங்கேற்க இந்தியா வந்துள்ளார்.
மார்ச் 2018ல் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பீட்டர்சன், நான்கு ஆஷஸ் தொடர்களை வென்றார் மற்றும் 104 டெஸ்ட்களில் 8,181 ரன்கள் எடுத்தார். 2005 ஆம் ஆண்டு ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் 158 ரன்கள் எடுத்த அவரது கம்பீரமான இன்னிங்ஸிற்காக இங்கிலாந்து கேப்டனாக ஒரு சுருக்கமான மற்றும் மோசமான ஆட்டத்தை கொண்டிருந்த பீட்டர்சன் சிறப்பாக நினைவுகூரப்படுவார்.
மேலும் அவர் கூறுகையில், லண்டன் நகர மேயர் சாதிக் கானை தாக்கினார். அவர் ஒரு சமூக ஊடக பதிவில், 'லண்டனில் என்ன நடக்கிறது? லண்டன் ஒரு காலத்தில் மிகவும் கவர்ச்சிகரமான நகரமாக இருந்தது. இப்போது லண்டனின் நிலை பரிதாபமாக உள்ளது. விலையுயர்ந்த கடிகாரங்களை யாரும் அணிய முடியாது. கையில் போனை வைத்துக்கொண்டு யாரும் நடக்க முடியாது. பெண்களிடம் இருந்து பைகள், நகைகள் திருடப்படும், கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்படும், என்பதை இந்த வீடியோ காட்டுகிறது. சாதிக் கான் உருவாக்கிய இந்த சூழ்நிலையை நினைத்து பெருமைப்பட வேண்டும்' என்று அவர் கூறியுள்ளார்.