கப்பல் மோதி இடிந்து விழுந்த அமெரிக்கப் பாலம்! கொத்துக் கொத்தாக நீரில் மூழ்கிய வாகனங்கள்!
அமெரிக்காவில் உள்ள பல்டிமோர் என்ற நகரத்தில் படப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 2.6 கி.மீ. நீள பாலத்தில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் போடப்பட்ட இந்தப் பாலம் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்துடன் பிசியாக இருக்கம்.
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பிரமாண்ட பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் கொத்துக் கொத்தாகச் சரிந்து ஆற்றில் விழுந்த மூழ்கின. இதில் ஏராளமான மக்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள பல்டிமோர் என்ற நகரத்தில் படப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 2.6 கி.மீ. நீள பாலத்தில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் போடப்பட்ட இந்தப் பாலம் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்துடன் பிசியாக இருக்கம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் பல்டிமோர் பாலத்தின் மீது சிங்கப்பூர் கொடியோடு வந்த சரக்குக் கப்பல் ஒன்று மோதியது. கப்பல் மோதிய அதிர்ச்சியில் பாலம் பொலபொலவென்று இடித்து ஆற்றில் விழுந்தது. பாலத்தில் சென்றுகொண்டிருந்த வாகனங்ககள் அடுத்தடுத்து சறுக்கிக்கொண்டு வந்து ஆற்றில் விழுந்தன.
சூரிய காந்தப்புல மாற்றத்தால் பூமியைத் தாக்கும் வலிமையான புவி காந்தப் புயல்! விளைவு என்ன?
விபத்து குறித்து தகவல் அறிந்த பல்டிமோர் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.விபத்தின் எதிரொலியாக பல்டிமோர் பாலம் உடனடியாக மூடப்பட்டது. ஆற்றில் விழுந்த வாகனங்கள் மற்றும் அவற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கப்பல் மோதி பாலம் இடிந்து விழும் காட்சியின் வீடோய சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த விபத்தில் சுமார் 20 பேர் நீரில் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிக்காக அப்பகுதியில் ஹெலிகாப்டர்கள் சுற்றி வருகின்றன. விமானப் போக்குவரத்து ராடார்களும் இயங்கிவருகின்றன. மோதிய கப்பலில் ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பு இல்லை.
பாலம் மீது மோதியது சிங்கப்பூர் கொடியுடன் வந்த டாலி என்ற சரக்கு கப்பல் தெரியவந்துள்ளது. 300 மீட்டர் நீளம் கொண்ட சரக்குக் கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது என்றும் சொல்லப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கான ஏதும் இதுவரை தெரியவரவில்லை.
காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்; முதல் முறை குரல் கொடுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்!