தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான  முகக்கவசங்களை  தயாரிக்கும் பணியில் சிறைக் கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.    திருச்சி,  கோவை , புழல் ஆகிய சிறைகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .  தையல் தொழிலில் நல்ல அனுபவம் கொண்ட கைதிகள் இதில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் .  தமிழகத்தில் கொரோனா  வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் ,  முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு அதிக அளவில் மாஸ்க்குகள்  தேவைப்படுகிறது .  தற்போது கையிருப்பில் உள்ள மாஸ்க்குகள் போதாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் .  தற்போது அதிக அளவில் மாஸ்க் தேவை ஏற்பட்டுள்ளது.  

எனவே அதை சிறைக்கைதிகளை வைத்து தயாரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் ,  சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் சிறைக் கைதிகள் மூலம் மாஸ்க் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார் .  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாஸ்க் தயாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் . இது குறித்து தெரிவித்த அவர்,   தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டதின் பேரில் மாஸ் தயாரிக்கும் பணியில் சிறைக்கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர் .  வைரசால் பாதிக்கப்பட்டவர்கள்,    சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் ,  மற்றும் நோய் அறிகுறியுள்ளவர்கள் என மாஸ்க் தேவை அதிகரித்துள்ளதால்  மாஸ் தயாரித்து தரும்படி சுகாதாரத்துறை கோரிக்கை வைத்துள்ளது.   அதேபோல காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு மாஸ்க் தேவைப்படுகிறது. பொதுமக்களுக்கும்  சிறைக்கு வெளியில் இருக்கிற சிறைச்சாலை பஜாரில் குறைந்த விலையில் மாஸ்க் விற்கப்பட உள்ளது.  சுமார் பத்து லட்ச ரூபாய்க்கு மாஸ்க் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மாஸ்க் தயாரிப்பதில் சிறைக் கைதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன் ,  சுமார் 8 லட்சம் மாஸ்க்குகள்  தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு நாட்களில் 6 ஆயிரம் மாஸ்க்குகள் தயார் செய்யப்பட்டுள்ளது,  இது வரும் நாட்களில் பத்தாயிரம் மாஸ்க்குகளாக அதிகரிக்கப்படும்.  இதற்காக 40 பேர் கொண்ட தையற்கலை தெரிந்த கைதிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.  காலை ஏழு முப்பது முதல் மாலை 4 மணி வரை தையற்பணி  நடைபெறுவதாகவும் அவர் கூறினார் .  இந்நிலையில் திருச்சி மற்றும் புழல் சிறையில் நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க்குகள் தயாரிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் அதன் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .  புழல் சிறையில் மட்டும் சுமார் 35 தையற்கலை தெரிந்த கைதிகள் மாஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.