ஆசியாவில் கோவிட்-19 மீண்டும் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங்காங், சிங்கப்பூரில் வைரஸ் தொற்றுகள் அதிகமாக உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையில் உள்ளது.
உலகப் பேரழிவை ஏற்படுத்திய கோவிட் தொற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதுவும் குறிப்பாக ஆசியாவின் சில பகுதிகளில் இந்த வைரஸ் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் வழக்குகளின் அதிகரிப்பு குறித்து பதிவு செய்துள்ளனர்.
ஹாங்காங்கில் கோவிட்:
இதுகுறித்து ஹாங்காங் சுகாதார பாதுகாப்பு மையத்தின் தொற்று பிரிவின் தலைவர் ஆல்பர்ட் ஆவ் கூறுகையில், கோவிட்-19 இப்போது மிகவும் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, மே 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கொரோனா காரணமாக 31 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்புகள் உட்பட்ட கடுமையான வழக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஹாங்காங்கில் சுமார் ஏழு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இங்கு கோவிட் அதிகமாக இல்லை என்றாலும், சில காரணிகளால் வைரஸ் வேகமாக பரவுவதாக சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது கழிவுநீரில் காணப்படும் வைரஸ் தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் கோவிட்:
சிங்கப்பூரிலும் கோவிட் எச்சரிக்க உள்ளது கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் இங்கு கோவிட் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளன. மே 3ம் தேதி முடிவடைந்த வாரத்தில் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 28% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனாவால் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு. ஆனாலும் தற்போதைய மாறுபாடுகள் தொற்று நோய்களின் போது காணப்பட்டதை விட மிகவும் கடுமையானவை அல்லது பரவக்கூடியவை என்பதற்கான அறிகுறிகள் ஏதமில்லை.
ஆசியாவின் நிலைமை என்ன?
சீனாவிலும் கொரோனா அலை கடந்த ஆண்டு போலவே விரைவில் மோசமாகலாம் என்று சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகள் கூறுகின்றனர். தாய்லாந்திலும் கோவிட் இருப்பதாக நோய் கட்டுப்பாடு துறை தெரிவித்துள்ளது.
குறிப்பு : மீண்டும் கொரோனா பரவுவதால், அதிக ஆபத்தில் உள்ளவர்கள் பூஸ்ட் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
