கொரோனாவின் கோரப்பசிக்கு இரையாகும் பொதுமக்கள்... உலக முழுவதும் 65,000 பேர் உயிரிழந்த பரிதாபம்..!
சீனாவின் பிறப்பிடமாக கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,00000ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 65,605 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் பிறப்பிடமாக கொரோனா வைரஸ் 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 65, 605ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12, 14, 487 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். 8 லட்சத்து 95 ஆயிரத்து 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், முக்கியமாக அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. அந்த நாட்டில் 3, 11, 637 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,454 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஸ்பெயின் நாட்டில் 1,30,759 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,418 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 1,24,632 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 15,362 பேர் இறந்துள்ளனர்.
ஜெர்மனியில் 96,092 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,416 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் 89,953 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். 7,560 பேர் இறந்துள்ளனர். ஈரானில் 55,743 பேரை வைரஸை தொற்றியுள்ளது. 3,603 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் 41,903 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,313 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவில் 3,374 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.