கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 19,000-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினிலும்  தொடர்ந்து உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 197 நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. முதலில் சீனாவில் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது சீனாவில் வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு, உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. ஆனால், சீனாவை விட  இத்தாலியில் அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. 

இன்று  நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 22 ஆயிரத்து 959 ஆக உயர்ந்துள்ளது. 19,000-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 114 பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 94 ஆயிரத்து 908 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 13 ஆயிரத்து 95 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரசுக்கு அதிகபட்சமாக இத்தாலியில் 6820 பேரும், ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 443 பேர்  உயிரிழப்பு சீனாவை மீஞ்சியது. ஈரானில் 1934 பேரும், பிரான்சில் 1100 பேரும் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் 782 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 562 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.