சீனாவில் 17 ஆண்டுகளாக மெல்ல மெல்ல வளர்ந்த கொரோனா...!! காத்திருந்து பழிவாங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி..
இந்த வைரஸ் சீனாவில் தோன்றி 17 ஆண்டுகள் ஆகிறது என்றும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், அதற்கு உதாரணமாக சீனாவில் தோன்றிய சார்ஸ் உலகம் முழுவதும் பரவிய சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்ததுடன் சுமார் 800 மேற்பட்டோர் உயிரிழக்க காரணமாக இருந்துள்ளது.
சீனாவால் உலகிற்கு மிகப்பெரிய வைரஸ் தொற்று ஆபத்து உள்ளதாக கடந்த 2007ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் உலகை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது . கொரோனா வைரசுக்கு முக்கிய காரணம், சீனாவின் உணவுக் கலாச்சாரமே என விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர் . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று மரபணு சீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இதுவரையில் உலகளவில் சுமார் 14, 500 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனாவை எதிர்த்து மக்கள் போராடிவரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவின் உணவு பழக்க வழக்கம் கலாச்சாரம் உலகுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் .
அதாவது கடந்த 2007ஆம் ஆண்டில் கிளினிகல் மைக்ரோபயலஜி ரிவியூஸ் இதழில் இதற்கான ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் தெற்கு சீன பகுதியில் மக்கள் குதிரைவாலி வௌவால்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் கடுமையான வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளனர் . குறிப்பாக தெற்கு சீனாவில் மக்கள் இதுபோன்ற இயற்கைக்கு புறம்பான உணவுகளை உண்ணுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் . இதனால் அப்பகுதியில் விலங்குகள் மற்றும் அங்குள்ள ஆய்வகங்கள் மூலம் சுவாச நோய்த்தொற்று ஏற்படுத்தும் சார்ஸ் போன்ற வைரஸ் கிருமிகள் தாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கப்பட்டது . எனவே அதன் ஆபத்தில் உள்ள முக்கியத்துவத்தை புறக்கணிக்கக் கூடாது என்றும் அந்த கட்டுரையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மரபணு மாற்றத்திற்கு உட்பட்டவை என்றும் இது புதிய மரபணு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்றும் கடுமையான விளைவுகளையும் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் 17 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வைரஸ் சீனாவில் தோன்றி 17 ஆண்டுகள் ஆகிறது என்றும் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், அதற்கு உதாரணமாக சீனாவில் தோன்றிய சார்ஸ் உலகம் முழுவதும் பரவிய சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பாதித்ததுடன் சுமார் 800 மேற்பட்டோர் உயிரிழக்க காரணமாக இருந்துள்ளது. சார்ஸ் , கொரோனா போன்ற வைரஸ்கள் நேற்றோ இன்றோ தோன்றியது அல்ல அது சீனாவின் தோன்றி பல ஆண்டுகள் ஆகிறது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் வைரஸ் வளமையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்த கொரோனா வைரசால் உலகளவில் சுமார் 14 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோரை இந்த வைரஸ் பாதித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.