கர்ப்பிணிகளை சைலண்டாக தாக்கும் கொரோனா...!! நியுயார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி..!!
200 பெண்களில் 33 பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது , அவர்களில் 29 பேருக்கு அந்த வைரஸ் தாக்கியிருப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை
சுமார் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை பரிசோதித்ததில் அவர்களில் பலர் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமலேயே , கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . நியுயார்க் மருத்துவமனையில் நேய் தொற்று உறுதி செய்யப்பட்ட 33 கர்ப்பிணி பெண்களில் 29 பேருக்கு கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை எனபது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது ஒரு ஆபத்தான நிகழ்வு என்ன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் . உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது இதில் கிட்டத்தட்ட 19 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது . இந்த வைரஸ் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , ஜெர்மனி , இங்கிலாந்து போன்ற நாடுகள் மிக மோசமாக தாக்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அங்குமட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் , தற்போது கொரோனா வைரசின் மையமாகவே அமெரிக்கா மாறியுள்ளது. நியுயார்க்க மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்நிலையில் நியூயோர்க்-பிரஸ்பைடிரியன் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையம் கடந்த மார்ச் 22 முதல் ஏப்ரல் 4 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்தது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதில், அவர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது அதாவது 200 பெண்களில் 33 பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது , அவர்களில் 29 பேருக்கு அந்த வைரஸ் தாக்கியிருப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை , குறிப்பாக சளி, காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற எந்த பாதிப்புகளும் இல்லாமல் இருந்தது எனவும் பிரசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் சார்ஷ் நோய்க்கான அத்தனை அறிகுறிகளும் பெற்றிருப்பர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் , கொரோனா தொற்று ஏற்பட்டால் சுவாச பிரச்சினைகள் வெளிப்படுவது வழக்கம் ஆனால் இந்த பெண்களுக்கு அப்படி எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பது மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது .
இந்நிலையில் மருத்துமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தொண்டையில் இருந்து சளி மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என ஆய்வு முடிவு கூறியது, ஆனால் அவர் குழந்தை பெற்ற மூன்று தினங்கள் கழித்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது . குறிப்பாக கர்ப்பிணி பெண்களை கொரோனா மிகவும் சைலண்டாக தாக்குகிறது என்பதை தெரியவந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளை வெளிபடுத்தாமல் தாக்குவதால் கர்ப்பிணிப் பெண்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் . எனவே மகப்பேறுக்காக மருத்துவமனைகளில் கர்பிணி பெண்கள் அனுமதிக்கப்படும் போது, கர்பிணிகளை கவனமாக தனிமைப்படுத்தி அவர்களுக்கு தனி படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் அவர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது போன்றவை அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.