சீனாவில் வீரியம் குறைந்த கொரோனா...!! ஈரானில் கொடூர முகத்தை காட்டத் தொடங்கியது...!!
இதற்கிடையில் ஈரான் நாட்டில் ஹிய்ம் நகரைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது , அவர்களில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது .
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி அழிவை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது அங்கு அதன் வீரியம் மெல்ல மெல்ல குறைந்து , தற்போது அது ஈரானை தாக்க தொடங்கியுள்ளது . சீனாவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தற்போது ஈரானில் தன் வேலையை காட்ட தொடங்கியுள்ளது . இது ஈரான் மக்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்க உள்ள நிலையில் ஈரானில் நான்கு பேர் இதற்கு உயிரிழந்துள்ளனர் . கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வுஹானில் தோன்றிய கொரோனா சீனா முழுவதும் பரவியுள்ளது .
இதுவரையில் இந்த வைரசுக்கு சீனாவில் 2305 பேர் உயிரிழந்துள்ளனர் சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுமார் 18 ஆயிரத்து 500 பேர் கொரனாவுக்கான சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 3 மாதமாக சீனாவை உலுக்கி வந்த கொரோனாவின் தாக்கம் அங்கு மெல்ல குறையத் தொடங்கியுள்ளது என சீன தேசிய சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது . இந்நிலையில் இந்த வைரஸ் ஈரானில் தன்னுடைய தாக்கத்தை காட்டத் தொடங்கியுள்ளது . இது ஈரான் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது . வுஹான் நகரில் இருந்து ஈரான் திரும்பிய மாணவர்கள் 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு , பிறகு வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர் .
இதற்கிடையில் ஈரான் நாட்டில் ஹிய்ம் நகரைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது , அவர்களில் ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஈரானில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது . இதனிடையே இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பாகவே தடுப்பு நடவடிக்கைக்களை எடுக்க வேண்டும் என ஐநாவின் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது . சீனாவில் இருந்து தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பிய மக்களால் பல நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் வைரஸ் தாக்கம் குறைந்தாலும் பலி எண்ணிக்கை குறையவில்லை. தற்போது சீனா ஜப்பானை அடுத்து ஈரானிலும் கொரோனா வைரஸ் தன்னுடைய கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது குறிப்பிடதக்கது.