ஸ்பெயினில் கொத்து, கொத்தாய் மடியும் மக்கள்... ஒரே நாளில் இத்தனை மரணமா?
ஸ்பெனியில் வரலாறு காணாத அளவிற்கு கொத்து, கொத்தாக மக்கள் மடிந்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவின் ஊஹான் நகரில் வெளியான கொரோனா வைரஸ், இன்றுவரை 199 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த விஜய் மகள்... இணையத்தில் வைரலாகும் திவ்யா சாஷா லேட்டஸ்ட் போட்டோ...!
இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 37 ஆயிரத்து 820 பேர் மடிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 85 ஆயிரத்தை கடந்திருக்கும் நிலையில், குணமடைந்தவர்கள் வெறும் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் மட்டுமே என்பது வேதனையளிக்கிறது.
இதையும் படிங்க: எவ்வளவு பட்டாலும் திருந்தாத சீனர்கள்... சீனாவில் மீண்டும் களைகட்டும் வவ்வால், நாய், பாம்பு விற்பனை...!
கொரோனாவின் கோரப்பிடியில் தற்போது அமெரிக்கா முதலிடத்திலும், இத்தாலி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் 3வது இடத்திலும் சிக்கி தவிக்கிறது. ஸ்பெனில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஒரே நாளில் 7 ஆயிரத்து 845 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம்... பிக்பாஸ் சாக்ஷியை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!
ஸ்பெனியில் வரலாறு காணாத அளவிற்கு கொத்து, கொத்தாக மக்கள் மடிந்து வருகின்றனர். தற்போது வரை கொரோனாவால் 63 ஆயிரத்து 460 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வெறும் 16 ஆயிஅத்து 780 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அடுத்தடுத்து நெருக்கடி நிலையை அனுபவித்து வரும் ஸ்பெயின் அரசு கடந்த 3 வாரங்களாக அந்நாட்டை லாக் டவுன் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.