இந்தியாவை கதிகலங்க வைக்கும் கொரோனா..!! அமெரிக்காவை விட நோய் பரவும் வேகம் அதிகம் என அதிர்ச்சி..!!

கொரோனா தொற்று உருவான சீனாவில் அந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

Corona to make India sunny, Shock that the disease is spreading faster than the United States

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆனால் அந்த அமெரிக்காவை விட இந்தியாவில்  நோய்த்தொற்று விகிதம்  இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 20 நாட்களில் இந்தியாவில் வைரஸ் தொற்று விகிதம் 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியுள்ளது, ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு உலகளவில் வெறும் 300 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர், சீனாவில் மட்டுமே அதன் தாக்கம் இருந்தது. ஆனால் இந்த ஆறு மாதகாலத்தில் கொரோனா வைரஸ் உலகில் சுமார்  215 நாடுகளுக்கும் பரவியுள்ளதுடன், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

Corona to make India sunny, Shock that the disease is spreading faster than the United States

கொரோனா தொற்று உருவான சீனாவில் அந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா, அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்நாடுகளில் அது வேகமாகவும் பரவி வருகிறது. உலக அளவில் 1 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் 50 லட்சம் பேர்  பாதிக்கப்பட 186 நாட்கள் ஆனது.  மற்றொரு 50 லட்சத்தை எட்ட 30 நாட்கள் ஆனது. அடுத்த 25 நாட்களில் நோய்பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியாக அதிகரித்தது. இந்தியாவில் கடந்த 20 நாட்களில் கொரோனா பாதிப்பு 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இரண்டரை மடங்கு அதிகம்,  ஜூன் மாத தொடக்கத்தில் நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 9 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 50 நாட்களில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 300 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் தொற்றுநோய் வேகமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு நாளும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

Corona to make India sunny, Shock that the disease is spreading faster than the United States

உலகில் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் கால் பகுதியினர் அமெரிக்காவில் உள்ளனர். அமெரிக்கா மற்றும் பிரேசிலின் அன்றாட தொற்று நோய் பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. மே-15 ஆம் தேதி நிலவரப்படி உலக அளவில் ஒப்பிடும் போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3.8 சதவீதமாக இருந்தது. இது ஜூன் 1 நிலவரப்படி 7.3 சதவீதமாக அதிகரித்தது, ஜூன் 15-க்குள் உலக அளவில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 8.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1க்குள் அது 10.8 சதவீதமாக உயர்ந்தது ஜூலை  21-க்குள் உலகளவில் இந்தியாவில் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 20 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் பாதிப்பு அதிகமாக இருக்ககூடும் என கணிக்கப்பட்டுள்ளது.  

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios