70 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பலி..! உலக நாடுகள் பேரதிர்ச்சி..!

 இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
 

corona death toll crossed 69 thousand

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 203 நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 12 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 69,419 ஆக அதிகரித்திருக்கிறது. மொத்தமாக 12,73,794 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 2,60,193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

corona death toll crossed 69 thousand

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அச்சம் இருக்கிறது. கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. எனினும் உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு  உயிரழந்தோரின் எண்ணிக்கையும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

corona death toll crossed 69 thousand

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தனது கோரத்தை காட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 3,577 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 86 பேர் உயிரிழந்துள்ளனர். 275 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் கடந்த இருவாரங்களாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios