உல்லாச படகில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை... பட்டையைக் கிளப்பும் நெதர்லாந்து...!
அந்த நதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு படகில் அனுமதிக்கப்பட்ட 28 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவின் வூகான் நகரில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது 210க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. இந்த கொடூர வைரஸால் உலகம் முழுவதும் 37 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 2 லட்சத்து 58 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். உயிருக்கே ஆபத்தான இந்த வைரஸிடம் இருந்தும் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனர்.
இந்த நோய்க்கு இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவும் இல்லை. தடுப்பூசி உருவாக்கும் முயற்சிகள் உலகமெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் தடுப்பூசி சந்தைக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவில் கூட சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை சரி செய்வதற்காக பல்வேறு நாடுகளில் பல சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?
இதேபோன்று நெதர்லாந்து நாட்டில் உள்ள அர்ன்ஹெம் என்ற சிறிய நகரில் புதுமையான முறையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்குள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர்கள் அங்குள்ள நதிக்கு 2 வாகனங்கள் மூலம் ஏற்றிச்செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?
அந்த நதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு படகில் அனுமதிக்கப்பட்ட 28 பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தங்கியிருந்த 21 பேரும் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகவும், நன்மைக்காவும் இப்படி ஒரு தீர்வை கையில் எடுத்துள்ளதாக அர்ன்ஹெம் நகர மார்க்கவுச் கூறியுள்ளார். கொரோனா நோயாளிகளை உல்லாச படகில் வைத்து சிகிச்சை அளிப்பது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த புதுமையான முயற்சிக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.