அமேசான் மழைக்காட்டில் விமான விபத்தில் சிக்கிய 4 குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்பு!

கொலம்பியாவில் கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் தொலைந்துபோன 4 பழங்குடியின குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.

Colombia Says 4 Children Missing For 40 Days Found Alive In Amazon After Plane Crash

கொலம்பியாவில் விமான விபத்தைத் தொடர்ந்து அமேசான் மழைக்காடுகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக காணாமல் போன நான்கு பழங்குடியின குழந்தைகள்,வெள்ளிக்கிழமை உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர் என அந்நாட்டு அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கூறியுள்ள அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, "முழு நாட்டிற்கும் மகிழ்ச்சி செய்தி! 40 நாட்களுக்கு முன்பு கொலம்பிய காட்டில் காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்" எனப் பதிவிட்டுள்ளார். தனது பதிவில் ராணுவத்தினர் மீட்கப்பட்ட குழந்தைகளுடன் இருக்கும் படத்தையும் இணைத்துள்ளார்.

ஹனிமூன் சென்ற இடத்தில் தமிழ்நாடு தம்பதி இறப்பு.. திருமணமாகி 1 வாரத்தில் பாலி தீவில் அதிர்ச்சி சம்பவம்

Colombia Says 4 Children Missing For 40 Days Found Alive In Amazon After Plane Crash

நான்கு காணாமல் போன குழந்தைகளும் முறையே 13, 9, 4 மற்றும் ஒரு வயது உடையவர்கள். கொலம்பிய பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைகள், அடர்ந்த அமேசான் மழைக்காட்டில் தனியாக சுற்றித் திரிந்துள்ளனர். மே 1ஆம் தேதி அவர்கள் பயணித்த செஸ்னா 206 விமானம் விபத்துக்குள்ளானது முதல் அவர்கள் காட்டில் தனியே மாட்டிக்கொண்டிருக்கின்றனர்.

அவர்களுடன் பயணித்து இறந்த குழந்தைகளின் தாய், விமானி மற்றும் ஒரு உறவினரின் உடலும் மீட்கப்பட்டுள்ளன. அனைவரும் விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டரில் டிக் வாங்கிய பயனர்களுக்கு மட்டும்... எலான் மஸ்க் வெளியிட்ட புதிய அறிவிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios