Watch: பருவநிலை மாற்றத்தால் சேற்று சுனாமியில் சிக்கிய இத்தாலி நகரம்; அச்சத்தில் மக்கள்!!
பருவநிலை மாற்றத்திற்கு உலக நாடுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பல வகைகளிலும் மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
இத்தாலியை தற்போது சேற்று சுனாமி நடுங்க வைத்துள்ளது. என்ன நடக்கிறது என்று மக்களால் அறிவதற்கு முன்பே இத்தாலி நாட்டின் பிரபலமான பார்டோனேச்சியா நகரில் ஓடும் மெர்டோவின் ஆற்றில் சேற்று சுனாமி ஏற்பட்டு நகரமே சேறால் பூசப்பட்டது போல காட்சியளிக்கிறது.
நகரின் நடுவில் இந்த ஆறு ஓடுவதால் பாதிப்பும் பெரிய அளவில் இருந்துள்ளது. மக்கள் சாதாரணமாக நடந்து செல்லும்போது ஏற்பட்ட சேற்று சுனாமியால் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் ஓடிச் சென்றனர். நகர வீதிகளில் சேறுடன் கூடிய தண்ணீர் வெளியேறி, அதில் இருந்த குப்பை கூளங்கள் மரத்தில் அப்பிக் கொண்டன.
பிபிசியின் தகவலின்படி, கனமழை காரணமாக மலை ஓடை நிரம்பி, நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும், 120 பேர் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வீதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மற்றும் வாகனங்களில் சேறு சூழ்ந்து கொண்டதால், தற்போது சுத்தப்படுத்தும் பணிகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
தவறுதலாக உயிருடன் புதைக்கப்பட்ட பெண்? குடும்பத்தினர் சொன்ன அதிர்ச்சி தகவல்.. உண்மை என்ன?
பீட்மாண்ட் பிராந்திய கவர்னர் ஆல்பர்டோ சிரியோ, "நேற்று இரவு பார்டோனேச்சியாவை மீட்பதற்கு அவசரகால நிலைக்கான கோரிக்கையில் நான் கையெழுத்திட்டேன். அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகள் எதுவும் இல்லை, ஆனால் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநில போலீஸ் படை முகாமிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது'' என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.