சீன விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக, 2 விஞ்ஞானிகளுடன் விண்கலத்தை ஏந்தியபடி சீன ராக்கெட் இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது.
இதுவரை 2 வாரங்கள் வரை மட்டுமே விண்வெளியில் தங்கி சீன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ள நிலையில், இந்த முறை ஒரு மாதம் விண்வெளியில் இந்த 2 விஞ்ஞானிகள் தங்கவுள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு சீனா நிறுவியுள்ள டியாங்காங் விண்வெளி நிலையத்தில், கணினி இயக்கம், உயிர் வாழும் வாய்ப்புகள் குறித்து விஞ்ஞானி ஜிங் ஜைபெங் தலைமையில் ஆராய்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக பட்டுப் புழுக்களை விஞ்ஞானிகள் விண்வெளிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
2022ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுடன் கூடிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க சீனா இலக்கு வைத்துள்ளது. அதன் ஒரு அங்கமாக சீனாவின் இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.
