எல்லா ரகசியமும் லீக்.. கனடா பிரதமரை வெளுத்து வாங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங் - வைரல் வீடியோ !
ஜி20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தோனேஷியாவின் பாலி நகரில் ஜி20 மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் நிதி பரிமாற்றம் ஆகிய தலைப்புக்களின் கீழ் உலக தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.
இந்தோனேசியாவின் பாலியில் G20 மாநாட்டின் நிறைவு அமர்வின் போது இந்த சம்பவம் நடைபெற்றது. ஜி ஜின்பிங் இதுபற்றி பேசும் போது, நாம் இருவரும் ஆலோசனை நடத்தியதை பேப்பரில் கசிய விடுகிறீர்களே.. இது முறையானது அல்ல..என்று சீன அதிபர் ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கூறுகிறார்.
இதையும் படிங்க..டெக்ஸ்டர் சீரிஸ்.! புது பிரிட்ஜ்.! வேறொரு பெண்ணுடன் அவுட்டிங்.! கொடூரமாக கொல்லப்பட்ட காதலி
உடனே இடைமறித்த ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில், நாங்கள் சுதந்திரமான மற்றும் திறந்த மற்றும் வெளிப்படையான உரையாடலை நம்புகிறோம், அதையே நாங்கள் தொடர்ந்து நடத்துவோம். நாங்கள் ஆக்கப்பூர்வமாக இணைந்து பணியாற்றுவதைத் தொடருவோம் என்று கூறினார்.
இதையும் படிங்க..உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா முதல்வரே.? திமுகவை அட்டாக் செய்த பாஜக !
முதலில் நாம் சில நிபந்தனைகளை விதித்துக்கொள்வோம் என்று ஜி ஜின்பிங் கூற, இருவரும் கைகுலுக்கிவிட்டு எதிர் திசைகளில் புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் எந்தவித சந்திப்பும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..கல்லூரிகளில் ராகிங் கொடுமையா.? கடும் நடவடிக்கை பாயும் - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !