Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி.. மூன்று ஆண்டுகள் கழித்து Green Signal கொடுத்த சீனா - முழு விவரம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக பெருந்தோற்று பாடாய்படுத்திய நிலையில், பல நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. 

China will resume the 15 days visa free entry for Singapore Citizens full details
Author
First Published Jul 23, 2023, 5:05 PM IST

இந்நிலையில் அந்த பதட்டம் கொஞ்சம் குறைந்துள்ள நிலையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் புதன்கிழமை (ஜூலை 26) முதல் சிங்கப்பூரர்களுக்கு 15 நாள் விசா இல்லாத நுழைவை (Visa Free Entry) சீனா மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வு பூர்ணே நாட்டை சேர்ந்த மக்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிங்கப்பூர் மற்றும் புருனேயின் குடிமக்களுக்கு வணிகம், சுற்றுலா, உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் காண சீனா வருவது மற்றும் போக்குவரத்துக்காகப் சீனா எல்லை வழியாக பயணம் செய்வது உள்ளிட்ட அனைத்திற்கும், 15 நாள் விசா இல்லாத என்ட்ரி கிடைக்கும் என்று தூதரகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்ட அறிவிப்புகளில் தெரிவித்தன.

இந்தியா போட்ட தடையால் அரிசித் தட்டுப்பாடு! அமெரிக்க கடைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் மக்கள்!

சிங்கப்பூரில் உள்ள சீன தூதரகம், “சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில், மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கான கூடுதல் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த முடிவை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கின் பெய்ஜிங்கின் வருகையின் போது, ​​சிங்கப்பூர்-சீனா உறவுகள் பற்றி பேசப்பட்டது, மேலும் சீனாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்து மற்றும் வணிக பரிவர்த்தனைகளை எளிதாக்கும் ஒரு மாற்றம் என்றும் MFA ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம், திரு லாரன்ஸ் வோங் - துணைப் பிரதமராக சீனாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டபோது, சிங்கப்பூர் குடிமக்களுக்கான விசா இல்லாத ஏற்பாட்டை சீனா மீண்டும் அமல்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளருக்கு ஏற்பட்ட சோகம்.. கழுத்தில் விழுந்த 210 கிலோ - சோகத்தில் மூழ்கிய உடற்பயிற்சி கூடம்!

Follow Us:
Download App:
  • android
  • ios