China Lockdown: சீனாவில் மீண்டும் ஊரடங்கு.. முக்கிய வணிக நகரங்கள் மூடல்.. நாளை முதல் அமல்..
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, சீனாவின் முக்கிய வணிக நகரமான சாங்காயில் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை முதல் ஐந்து நாட்களுக்கு இந்த ஊரடங்கானது அமலில் இருக்கும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சீனாவின் மேற்கு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் ஊரடங்கு:
ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, சீனாவின் முக்கிய வணிக நகரமான சாங்காயில் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. நாளை முதல் ஐந்து நாட்களுக்கு இந்த ஊரடங்கானது அமலில் இருக்கும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சீனாவின் மேற்கு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் பாதிப்பு:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அங்கு இந்த மாத தொடக்கத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பினால், தற்போது பெருநகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் வுஹான் நகரில் கொரோனா பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கட்டுப்பாடுகள் விதிப்பு:
இன்றளவும் கூட கொரோனா பாதிப்பிலிருந்து மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இச்சூழலில் சீனாவில் தற்போது பதிவாகி வரும் பாதிப்பு எண்ணிக்கை, உலக அளவில் குறைவானதாக இருந்தாலும், 2019 ல் ஏற்பட்ட முதல் வார பாதிப்பை விட அதிகம் என்று கூறப்படுகிறது. சீனாவின் தேசிய சுகாதார அணையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, சீனாவில் இன்று ஒரு நாளில் 4,500 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை முந்தைய நாளை விட குறைவு என்றாலும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக பதிவான இரட்டை இலக்க தினசரி பாதிப்பு எண்ணிக்கை விட அதிகமாகும்.
முழு ஊரடங்கு:
இதனால் சீனா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. அதன் படி, வணிக நகரமான ஷாங்காயில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் அடி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடுமட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தை கணக்கில் கொண்டு, கிழக்கு சீன துறைமுகம் மற்றும் நிதி மையத்தை இயக்குவது கட்டாயம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வணிக நகரம் மூடல்:
ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக, "தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும்" நாட்டில் இரு பகுதிகளாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக சர்வதேச விமான நிலையம் உள்ளடக்கிய பொருளாதார மண்டலமாக விளங்கும் முக்கிய நகரமான புடாங் நாளை முதல் ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது.
அதே போல் அடுத்தக்கட்ட ஊரடங்கான ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், ஷாங்காய் நகரின் வரலாற்று மையமாக விளங்கும் புக்சி மாவட்டம் அடுத்த ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது. ஊரடங்கு நாட்களில் பேருந்துகள், டாக்சிகள் உள்ளிடவை இயங்காது என்றும் சுரங்கப்பாதைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு விமான மற்றும் இரயில் போக்குவரத்து சேவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.