கொரோனாவை சுமந்து வரும் எலிகள், சீன ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி.!! கதி கலங்கி நிற்கும் உலக நாடுகள்.
ந்த ஆய்வின் முடிவில் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது 3 அடி சமூக தொலைதூர வழிகாட்டுதல்கள் போதுமானதாக இருக்காது என்பது இந்த ஆய்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது
பெரும்பாலும் குருவனம் வைரஸ் செருப்பு ஷூ போன்ற காலணிகள் மூலமாக பரவுகிறது என சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது வுஹானில் உள்ள ஹூஷென்ஷன் மருத்துவமனையில் ஐ சி யு பிரிவில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்களின் காலணிகளில் எடுக்கப்பட்ட மாதிரிகள் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவல் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது . இதுவரை உலக அளவில் 18 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 248 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். இத்தாலி , ஸ்பெயின் , அமெரிக்கா , பிரான்ஸ் , ஜெர்மனி , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, இந்தியா , ரஷ்யா , ஜப்பான் போன்ற நாடுகளும் தற்போது வைரஸின் தாக்கத்தை எதிர் கொண்டு வருகின்றன.
கிட்டத்தட்ட 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது . இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் இரவும் பகலுமாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் . ஒருபுறம் வைரஸுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இந்த வைரஸ் பரவலை எப்படி தடுப்பது என்பதற்கான ஆய்வுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வைரஸ் பரவல் குறித்த ஆராய்ச்சியில் வைரஸில் பிறப்பிடமான வுஹானைசை சேர்ந்த மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் . வுஹானில் உள்ள மருத்துவமனைகளில் அவர்கள் நடத்திய ஆய்வில் ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அணிந்துள்ள காலணிகள் மூலம் இது பல்வேறு இடங்களுக்கு பரவியதை கண்டறிந்துள்ளனர். அதாவது அவர்களின் காலணிகளை பரிசோதனை செய்ததில் அதில் ஏராளமான கிருமிகள் படிந்திருந்ததும் , அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் அது பரவுவதையும் கண்டுபிடித்துள்ளனர் . மேலும் கனினி, எலிகள், குப்பைத்தொட்டிகள். மூலம் கொரோனா எளிதில் பரவும் என தெரிவித்துள்ளது .
இது மருத்துவ உலகில் தவிர்க்க வேண்டிய மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது. ஐசியூவில் பணியாற்றுவார்கள் தாங்கள் பயன்படுத்துவது காலணிகளை உடனுக்குடன் கிருமிநாசினிகள் தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதுஅதுமட்டுமின்றி தற்போது வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமெனில் ஒரு மீட்டர் தூர சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது , ஆனால் ஒரு மீட்டர் இடைவெளி பின்பற்றுவதால் பயன் இல்லை என்று குறைந்தபட்சம் 4 மீட்டர் தூரம் அதாவது 13 அடிக்குமேல் இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே அதை தடுக்க முடியும் என சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவும் தூரம் மற்றம் கடைபிடிக்க வேண்டிய சமூக இடைவெளி குறித்து பீஜிங்கில் உள்ள ராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியில் ஒரு குழு ஆய்வு மேற்கொண்டது, அந்த ஆய்வின் முடிவில் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது 3 அடி சமூக தொலைதூர வழிகாட்டுதல்கள் போதுமானதாக இருக்காது என்பது இந்த ஆய்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது
இந்த வைரஸ் 3 அடி தூர இடைவெளியில் எளிதில் பரவ கூடியதாகவும் குறைந்தபட்சம் நான்கு மீட்டர் தூர இடைவெளியாவது கடைப்பிடிக்க வேண்டும் என்வும் சீன ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர் . கிட்டத்தட்ட 13 அடிக்குமேல் இந்த வைரஸ் பரவக் கூடியதாக இருக்கிறது என அவர்கள் எச்சரித்துள்ளனர் . இதற்கு முன்பாகவே இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடியது என சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், வைரஸ் காற்றில் பரவக்கூடியது அல்ல என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் திட்டவட்டமாக மறுத்திருந்தது . உலக சுகாதார நிறுவனம் அதையே கூறியிருந்தது , இந்நிலையில் சீன ஆராய்ச்சியாளர்கள் சமூக இடைவெளி மேலும் அதிகரிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது .