Covid in China: கதிகலங்கி நிற்கும் சீனா!கொரோனாவால் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு தொற்று:24 கோடி பேர் பாதிப்பு?

சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில் இந்த வாரத்தில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

China reported 37 million covid cases each day, raising the concern about Covid-19.

சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்லும் நிலையில் இந்த வாரத்தில் ஒரே நாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அரசின் தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் இந்த செய்தி கசிந்துள்ளது. உலகளவில் ஒரு நாட்டில் ஒரேநாளில் இந்த அளவு மக்கள் கொரோனாவில் பாதிக்கப்படுவது இதுதான் முதல்முறையாகும்.

சீனாவில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் தற்போது 18சதவீதம் பேர் கடந்த 20 நாட்களில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம், அதாவது 24.80 கோடி பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று  சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தக் கணிப்பு உண்மையாகஇருக்கும் பட்சத்தில் 2022, ஜனவரி மாதம் இருந்த அளவைவிட அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

China reported 37 million covid cases each day, raising the concern about Covid-19.

சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியைத் தொடர்ந்து அங்கு கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி லட்சக்கணக்கில் மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள்.ஆனால், சீன அரசு தரப்பில் இதுவரை எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை.

சீனா பேரழிவைச் சந்திக்கும்!தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!5,000 பேர் உயிரிழக்கலாம்

குறிப்பாக சிச்சுவான் மாகாணத்திலும், தலைநகர் பெய்ஜிங்கிலும் வசிக்கும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சீனா அரசு  பிசிஆர் பரிசோதனை மையங்களை மூடிவிட்டு, ரேபிட் கோவிட் பரிசோதனையை மட்டுமே நடைமுறையில் வைத்துள்ளது. இதனால், பாதிப்பின் அளவு துல்லியமாக கூற தேசிய சுகாதார அமைப்பு மறுக்கிறது. 

China reported 37 million covid cases each day, raising the concern about Covid-19.

மெட்ரோடேட்டா டெக் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் சென் குயின் கூறுகையில் “ டிசம்பர் நடுப்பகுதியிலும் ஜனவரி கடைசியிலும் சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டும். சீனாவில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதுதான் இந்த பரவலுக்கு முக்கியக் காரணம். தினசரி ஒருகோடி பேர்வரை பாதிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

‘சிக்கன் டிக்கா மசாலா’-வைக் கண்டுபிடித்த பாகிஸ்தான் சமையற் கலைஞர் காலமானார்

சீனாவில் கொரோனாவில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள், தினசரி எத்தனைபேர் கொரோனாவில் உயிரிழக்கிறார்கள் என்ற விவரத்தை இதுவரை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்லும் போது, உயிரிழப்பும் மோசமான அளவில் இருக்க வேண்டும் எநனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

China reported 37 million covid cases each day, raising the concern about Covid-19.

சீனாவில் என்ன நடக்கிறது? மிரட்டும் கொரோனா உயிரிழப்பு!மயானத்தில் காத்திருக்கும் உடல்கள்

பெரும்பாலும் கொரோனா வைரஸ் சீனாவின் நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்குப் பரவியுள்ளது. அங்கெல்லாம் மருத்துவ வசதி குறைவாக இருப்பதால், உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. 

சீனாவில் கடந்த 20ம் தேதி 3.70 கோடி பேர் கொரோனாவில் பாதி்க்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வரும் நிலையில் சீன அ ரசு தரப்பில் இருந்து 3,049 பேர் மட்டுமே பாதி்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது, சிகிச்சை அளிக்க முடியாமல் செவிலியர்கள், மருத்துவர்கள் திணறுகிறார்கள். ஆனால் சீன அரசு பாதிப்பு குறைவு என்று தொடர்ந்து கூறி வருகிறது


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios