எல்லையில் இருந்து வேகவேகமாக பின்வாங்கிய சீன ராணுவம்..!! இந்திய படைகளை கண்டு மிரட்சி..!!
சீனா பின்வாங்கியதற்கான மூன்றாவது காரணம், உலகளவில் சீனா மீது ஏற்பட்டுள்ள அழுத்தம். தென்சீனக் கடலில் அமெரிக்காவுடனான மோதல், உலகின் சக்திவாய்ந்த நாடுகளான ஜி-7 இல் இந்தியாவை இணைத்து விரிவுபடுத்த அமெரிக்கா ஆர்வம் காட்டுவதும்,
கடந்த 25 நாட்களுக்கு மேலாக இந்திய எல்லையில் முகாமிட்டிருந்த சீன ராணுவம், சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்பிய சீன, தன்னுடைய திட்டத்தில் தோல்வி ஏற்பட்டதையடுத்து அது பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆக்ரோஷமான நிலைப்பாட்டிலிருந்து சீன ராணுவம் கடந்த மூன்று, நான்கு நாட்களாக அமைதியாகவும், தன்மையாகவும் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. லடாக் உட்பட்ட இந்திய எல்லையில் உள்ள அனைத்து முக்கிய இடங்களில் இருந்தும், சீனா அங்குலம் அங்குலமாக பின்வாங்குவதாக சர்வதேச அரசியில் வல்லுனர் "கமர்ஆகா" தெரிவித்துள்ளார்.
வேகவேகமாக இந்திய எல்லையில் சில பகுதிகளை கைப்பற்றும் நோக்கத்தில் வந்த சீனா, திடீரென பின்வாங்கி இருப்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இந்நேரத்தில் எல்லையில் இருந்து சீனா பின் வாங்குவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளது என சர்வதேச அரசியில் வல்லுனர் கமர் ஆகா தெரிவித்துள்ளார். முதல் காரணம் சீன ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவம் எடுத்த தீவிர தயார்நிலை சீனாவை ஆரம்பத்திலேயே நிலைகுலைய வைத்து விட்டது என கூறுகிறார். அதாவது வடக்கில் கடந்த 5-ஆம் தேதி சீன மற்றும் இந்திய துருப்புகள் இடையே மோதல்கள் வெடித்தன, பின்னர் நான்கு நாட்களுக்குப் பிறகு சிக்கிமில் 9-ஆம் தேதி இருநாட்டு படை வீரர்களும் மோதிக்கொண்டனர், அங்கு தகராறு தீவிரமடையவில்லை என்றாலும், கால்வான் மற்றும் வடக்கிலுள்ள பாங்கொங் த்சோ ஏரிக்கு அருகில் சீனா ராணுவம் தன் படைகளை குவித்து இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தனது படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
கிட்டத்தட்ட அங்கு 5ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டனர், ஆனால் சீனாவின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் தனது எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனாவுக்கு இணையான ஆயுதங்களுடன் ராணுவத்தை குவித்ததுடன், பீரங்கிகள் மற்றும் ஏராளமான போர் வாகனங்களையும், விமானங்களையும் நிலை நிறுத்தியது. இந்தியா எடுத்த இந்த எதிர் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற முடிவுக்கு வந்தது சீனா. இதுவரை இரு தரப்புக்கும் இடையே பத்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஜூன்-6ஆம் தேதி ராணுவ உயர் அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதாவது சீனாவுக்கு எப்போதுமே குள்ளநரி தந்திரம் உண்டு, அதினிடம் அன்பாக பேசினால் அது ஆதிக்கம் செலுத்த பார்க்கும், அதே கடுமையான அணுகுமுறைகளை கடைப்பிடித்தால் பின்வாங்கும் ஆகவே டிராகனுடன் கண்டிப்பை காட்டுவது சரியான நடவடிக்கையே அதை இந்தியா மிகச் சரியாக செய்தது என கமர் ஆகா தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லையில் சீனா என்ன செய்ததோ அதையேதான் ஜப்பான், தைவான் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுடனும் செய்கிறது என்ற அவர், ஆனால் இந்தியாவிடமிருந்து அது பின்வாங்க இரண்டாவது காரணம், அதற்குள்ள நெருக்கடிதான், ஏற்கனவே கொரோனா வைரஸ் நெருக்கடியால் சீனாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. உலகின் தொழிற்சாலை என்று அழைக்கப்படும் சீனாவிலிருந்து ஏற்றுமதி குறைந்து, அங்குள்ள குடிமக்கள் மத்தியில் வேலையின்மை மற்றும் விரக்தி அதிகரித்துள்ளது. இதை திசை திருப்புவதற்கு சீனா பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில் தென் சீனக் கடலில் அமெரிக்காவின் தலையீட்டால் அங்கு அதனால் எதையும் செய்ய முடியாத நிலையில், இந்திய எல்லையில் அது நெருக்கடி கொடுக்க தொடங்கியது. அதே நேரத்தில் அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவை நிறைவேற்ற மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து பட்டுப்பாதை திட்டத்தில் சீனா இறங்கியுள்ளது. ஆனால் அதில் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதால் உள்நாட்டில் சீனா மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது என அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.
சீனா பின்வாங்கியதற்கான மூன்றாவது காரணம், உலகளவில் சீனா மீது ஏற்பட்டுள்ள அழுத்தம். தென்சீனக் கடலில் அமெரிக்காவுடனான மோதல், உலகின் சக்திவாய்ந்த நாடுகளான ஜி-7 இல் இந்தியாவை இணைத்து விரிவுபடுத்த அமெரிக்கா ஆர்வம் காட்டுவதும், இந்நேரத்தில் உலகின் ஆல்ரவுண்டரான சீனாவால் உலகில் மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்ட இந்தியாவுடன் தற்போதைக்கு போர் செய்ய முடியாது என்பதாலும், அப்படியே அது போரில் ஈடுபட்டாலும் உலகச் சந்தையை அது இழக்க நேரிடும் என்பதாலும் தற்போது லடாக்கில் தனது நிலைப்பாட்டை அது மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளது என கமர் ஆகா விவரித்துள்ளார்.