எல்லையில் நெஞ்சை நிமிர்த்தி நின்ற இந்தியா..!! தானாக வழிக்கு வந்த சீனா..!!

கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற இருநாட்டு தலைவர்களின் கருத்தை பாதுகாப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

china external afire says india and china talk to be stable

இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையேயான பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது. கொரோனா வைரஸ் போராட்டத்திற்கு மத்தியில் இந்தியா-சீனா இடையே எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 5-ஆம் தேதி  லடாக் எல்லைப்பகுதியான பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன படையினருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருநாட்டு ராணுவ  வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

china external afire says india and china talk to be stable

அதைத்தொடர்ந்து இருநாட்டு உள்ளூர் ராணுவ அதிகாரிகளுக்குமிடையே  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பதற்றம் தணிந்தது, அதேபோல்  மே 9-ஆம் தேதி சிக்கிம் எல்லையான நகுலா பாஸ் பகுதியில் இருநாட்டு படைவீரர்களும் மோதிக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மே 22-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்து விட்டதாக கூறி  சீனா அங்கு ஏராளமான படைகளை குவிக்க தொடங்கியது, இந்தியாவும் பதிலுக்கு படைகளைக் குவித்துவந்த நிலையில் இருநாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் மே 27-ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும்  இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என ட்ரம்ப் கூறினார். எல்லைப் பிரச்சினையை அமைதியாக தீர்ப்பதற்கு சீன தரப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா பதிலளித்தது, இதற்கிடையில் இந்திய-சீன எல்லை நிலவரம் பொதுவாக கட்டுப்படுத்தக்கூடியது, இருநாடுகளுக்கும்  இடையேயான தகவல் பரிமாற்றம் சிறப்பாக உள்ளது, எனவே இதில் மூன்றாவது  தரப்பு தலையீடு தேவையில்லை என சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லீ லிஜியான் அமெரிக்காவை புறக்கணித்தார்.

china external afire says india and china talk to be stable

அமெரிக்க அதிபரின் அறிவிப்பை இரு நாடுகளும் புறக்கணித்ததைத் தொடர்ந்து இருநாட்டுக்கும் இடையே கிட்டத்தட்ட 12 சுற்று பேச்சுவார்த்தைகள்  நடைபெற்றன, ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, இந்நிலையில் 14 கார்ப்பஸ் கமாண்டர் அளவிலான இந்தோ-சீன பேச்சுவார்த்தை சனிக்கிழமை  சீன எல்லைப் பகுதியில் உள்ள  மோல்டோவில் நடைபெற்றது. 14 கார்ப்பஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்  ஹரிந்தர் சிங், சீனாவின் தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் லியு லினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பிலிருந்தும் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர், இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் செய்தி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் இருநாட்டு எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அதில் இருநாட்டுக்கும் இடையேயான எல்லை உறவு நல்ல நிலையில் இருந்து வருகிறது.  இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற இருநாட்டு தலைவர்களின் கருத்தை பாதுகாப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. 

china external afire says india and china talk to be stable

இருதரப்பினரும் எல்லையில் அமைதியை பேணவும், நல்ல சூழ்நிலையை உருவாக்கவும்  இணைந்து செயல்படுவார்கள் என்றும், இருநாட்டுக்கும் இடையேயான ஒட்டுமொத்த நிலைமையும் நிலையானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின் பிங் இடையேயான உச்சி மாநாட்டின்போது டெல்லி மற்றும் பெய்ஜிங் இடையே வேறுபாடுகளை சர்ச்சைகளாக அதிகரிக்க  இருநாடுகளும் அனுமதிக்கக்கூடாது என்று மோடியும், ஜி ஜின் பிங்கும் பலமுறை வலியுறுத்தி பேசினர். இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான கருத்தை மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios