சீறும் பாம்பை நம்பலாம் சீனாக்காரனை நம்பக்கூடாது..!! வயிற்றெரிச்சல் பிடித்த ஜி ஜின் பிங்..!!
இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 25 நிமிடங்கள் உரையாற்றியதுடன், மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜி7 உச்சி மாநாட்டிற்கு இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவை அழைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டத்திற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவை கட்டம் கட்டுவதற்கான முயற்சி இது என்றும், ட்ரம்பின் இந்த திட்டம் தோல்வியில் முடியும் என்றும் சீனா தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளது. ஜி-7 என்பது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட ஏழு வளர்ந்த நாடுகளின் குழுவாகும் அனைத்து நாடுகளின் தலைவர்களும் வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து, காலநிலை மாற்றம் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய நிர்வாக பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருகின்றனர். அமெரிக்கா தற்போது ஜி-7 நாடுகளை ஒருங்கிணைக்கும் தலைமை பொறுப்பு வகித்து வருகிறது. கொரோனா தொற்றுநோய் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் டொனால்ட் ட்ரம்ப் இந்த மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்தார், இந்நிலையில் ஜி7 நாடுகள் என்ற நிலையை மாற்றி, ஜி 11 நாடுகள் என்ற அடிப்படையில் இந்த அமைப்பை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளையும் இதில் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜி-7மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, ஆஸ்திரேலியா தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் பங்கு பெற வேண்டுமென அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 25 நிமிடங்கள் உரையாற்றியதுடன், மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார் சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான், அனைத்து சர்வதேச அமைப்புகளும், மாநாடுகளும் நாடுகளின் பரஸ்பர நம்பிக்கையுடன் ஒத்துப்போக வேண்டும் என்று சீனா நம்புகிறது. இவை உலகில் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும், ஆனால் சீனாவை குறி வைப்பதாக இருக்கக்கூடாது, அப்படியான எந்த ஒரு முயற்சியும் வீணாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் கூறியுள்ளார். ஜி 7க்கு இந்தியாவையும், மற்ற மூன்று நாடுகளையும் ட்ரம்ப் அழைப்பது சங்கடத்தை ஏற்படுத்திள்ளது எனவும் லியான் கூறியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். உச்சி மாநாட்டின்போது ஜி7 தலைவரும், பிரெஞ்சு ஜனாதிபதியுமான இமானுவேல் மேக்ரான் ஜி 7க்கு மாநாட்டிற்கு பிரதமர் மோடியை அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மாநாட்டிற்கு ரஷ்யாவை சீனா அழைத்திருப்பது, சீனாவுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜி 7 க்கு முன்னர் அதில் ரஷ்யாவையும் இணைத்து ஜி-8 என்று அழைக்கப்பட்டது, ஆனால் கிரிமியா ஆக்கிரமிப்புக்குப் பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அது வெளியேற்றப்பட்டது, அதன்பின்னர் சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவுகள் வலுபெற்றன. அப்போதிலிருந்து ரஷ்யா சீனாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்துவருகிறது. இப்போது ரஷ்யா மீண்டும் ஜி7-ஐ நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது, அதாவது ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ரஷியா தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவை ஜி 11 அமைப்பில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.