இந்தியாவிடம் அடிவாங்காமல் போகாது போல இந்த சீன ராணுவம்..!! எல்லையில் மீண்டும் அட்ராசிட்டி..!!
விமானப்படையும் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆக்ஸாய் சின் பகுதியில் சீனா ராணுவத்தினரின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் எல்லையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீனப் படைகள் பின் வாங்கியதாக தகவல் வெளியான நிலையில், மீண்டும் சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் எல்லையில் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் கடந்த ஒரு மாத காலமாக இந்தியா-சீனாவுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வரும் சனிக்கிழமை அன்று இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதேநேரத்தில் எல்லையில் முன்பிருந்ததை காட்டிலும் இந்தியா கூடுதல் படைகளை குவித்து வருகிறது, விமானப்படையும் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆக்ஸாய் சின் பகுதியில் சீனா ராணுவத்தினரின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சீன போர்விமானங்கள் அடிக்கடி இந்திய எல்லைக்கு அருகில் வந்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அதற்கு இணையாக இந்திய விமானப்படையும் லடாக் பிராந்தியத்தில் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் விமான தளத்திலிருந்து முழு எரிபொருள் மற்றும் ஆயுதங்களுடன் எந்த நேரத்திலும் எல்லை நோக்கி பறக்கும் வகையில் போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பொருத்தமான பதிலடி கொடுக்கும் வகையில் லடாக் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரை சுமார் 3488 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தியா சீனா எல்லைகோட்டு பகுதியில் இந்திய ராணுவ தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக உத்ரகாண்ட் மற்றும் சிக்கிம் எல்லையில் கூடுதல் ராணுவத் துருப்புகளை இந்தியா நிறுத்தியுள்ளது.
அதேநேரத்தில் சீனாவும் படைகளை அங்கே குவித்துள்ளதாக கூறப்படுகிறது, இந்நிலையில் எல்லைக் கோட்டுப் பகுதியில் படைக்குவிப்பு, ரோந்து பணி, ட்ரோன் மூலம் எல்லையை கண்காணிப்பது போன்ற பணிகள் அதிகரித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சில ஆதாரங்களின்படி லடாக் தவிர சீன ராணுவம் சிக்கிமில் சில பகுதிகளில் ஊடுருவியுள்ளதாகவும், அங்கே இரு நாட்டு படைவீரர்களும் ரோந்துபணியை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், அதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் லடாக் மற்றும் பிற எல்லை மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில், எல்லையில் போதுமான படைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக ராணுவ உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.