உலகத்தையே வைரசில் சிக்க வைத்து , தப்பிக்க பார்த்த சீனா..!! ஆண்டவனா பார்த்து கொடுத்த தண்டனை..??
இத்தாலி , ஸ்பெயின் , ஜெர்மனி, பிரான்ஸ் , பிரிட்டன் , ஈரான் , துருக்கி , ரஷ்யா, ஜப்பான் , இந்தியா என உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் புதிதாக 108 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது, சீனாவில் கொரோனோ இரண்டாம்கட்ட பரவல் தொடங்கிவிட்டதா என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது , கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பிறந்தது . அங்கு மெல்ல மெல்ல வளர்ந்து அந்த வைரஸ் ஜனவரி மாதம் இறுதியில் தன் கொடூர முகத்தை காட்ட தொடங்கியது , பிறகு சீனா முழுவதும் காட்டுத்தீயாய் பரவிய அது ஒட்டுமொத்த சீனாவையும் கபளீகரம் செய்தது . அந்த வைரஸின் தாக்குதலை சமாளிக்க முடியாத சீன அரசு அந்த வைரஸ் தோன்றிய வுஹான் நகரம் முழுவதையும் சீல் வைத்தது . எனவே கடந்த 2 மாதத்துக்கு மேலாக வுஹான் நகரம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,
அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டது , இதனால் அங்கு பலி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததுடன், வைரசால் மொத்தம் 81 ஆயிரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது, மொத்தத்தில் 3 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்தனர். அதனையடுத்து சீனாவின் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தது . இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் சீனா மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது , சீனாவில் கொரோனா கட்டுபடுத்தப்பட்டாலும், அமெரிக்கா , ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களுக்கும் பரவியுள்ளது, அமெரிக்கா கொரோனா வைரஸின் மையமாகவே மாறியுள்ளது . அமெரிக்காவில் கிட்டத்தட்ட 5 லட்சத்து 60 ஆயிரத்து 433 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் , சுமார் 22 ஆயிரத்து 215 பேர் உயிரிழந்துள்ளனர் . இத்தாலி , ஸ்பெயின் , ஜெர்மனி, பிரான்ஸ் , பிரிட்டன் , ஈரான் , துருக்கி , ரஷ்யா, ஜப்பான் , இந்தியா என உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சீனாவில் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளது, பொது போக்குவரத்து அனைத்தும் செயல்படத் தொடங்கியுள்ளன . மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர், இந்நிலையில் அத்தியாவசிய தேவைகள் சார்ந்த உற்பத்திகள் வேகமெடுக்க தொடங்கியுள்ளன . இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மையம் கொண்டுள்ள கொரோனா இன்னும் சில வாரங்களில் சிங்கப்பூர் , சீனா போன்ற மேற்காசிய நாடுகளில் மீண்டும் இரண்டாம்கட்ட பரவாலை தொடங்க வாய்ப்புள்ளது, என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர். சீனாவில் கடந்த வாரம் சுமார் 44 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது . சீனாவில் ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெறப்பட்ட நிலையில் புதிய வைரஸ் தொற்று சீனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . இந்நிலையில் அதன் எண்ணிக்கை அங்கு மெல்ல மெல்ல உயர்ந்து , தற்போது 108 ஆக அதிகரித்துள்ளது .
வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு திரும்பிய உள்ளூர் பிரஜைகளின் மூலம் இந்த வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என சீனா கூறி வந்தாலும் , ஒருவேளை கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் தொடங்கி விட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது . இந்நிலையில் சீனாவில் புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் அதன் எண்ணிக்கை 108 உயர்ந்துள்ளது . இதனால் மொத்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது . புதிதாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 341 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் 1156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 121 பேர் (ஐசியூ) தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர் . இந்நிலையில் மீண்டும் சீனாவில் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு அறிவிப்பது குறித்து யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது .