சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

தென் அமெரிக்க நாடான சிலியில் ரிக்டரில் 7.7 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க நிலவியல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

சிலி நாட்டின் தென்மேற்கு நகரான பியூட்ரோ மான்டில் சக்கி வாயந்த நிலநடுக்கம் நேற்று காலை 11.30 மணிக்கு ஏற்பட்டது. சிலோயி தீவின் தெற்கு, பியூர்டோ குயிலோ நகரின் தென்மேற்கில் 40 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு கீழே 33 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது.

இதையடுத்து சிலியின் தெற்கு கடற்கரை ஓர நகரங்களுக்கு அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.