Asianet News TamilAsianet News Tamil

இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திரயான்-3: வைரல் புகைப்படம்!

ஆஸ்திரேலிய நாட்டில் இரவு நேர வானில் தெரிந்த சந்திரயான்-3 புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது

Chandrayaan3 night sky picture in Australia goes viral
Author
First Published Jul 16, 2023, 3:25 PM IST

ஆஸ்திரேலியாவின் இரவு வானில் தெரிந்த சந்திரயான்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ'டோனல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்தும், ரீ-ட்வீட் செய்தும் வருகின்றனர்.

இதுகுறித்து வானியல் ஆர்வலர் டிலான் ஓ'டோனல் தனது ட்வீட்டில், சந்திரயான்-3 இன் நேரலை வெளியீட்டை யூ-டியூப்பில் பார்த்ததாகவும், அதன்பிறகு சுமார் 30 நிமிடங்களுக்குப் கழித்து, அது தனது வீட்டைக் கடந்து சென்றபோது, இரவு நேரத்தில் அதன் புகைப்படத்தை எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

 

 

அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், மின்னும் நட்சத்திரங்களின் பின்னணியில் மயக்கும் நீல நிறத்தில் சந்திரயான்-3 விண்கலம் தெரிகிறது. இதனை பார்த்து உற்சாகமடையும் நெட்டிசன்கள், கமெண்ட்ஸ் மூலம் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சந்திரயான்-3 விண்கலம் எங்கு உள்ளது? விண்ணில் நடந்த அதிசய காட்சிகள் வெளியீடு!

முன்னதாக, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்ட 16 நிமிடங்களில் புவி நீள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. பூமியை 5 முறை சுற்றிய பின்னர், புவி மற்றும் நிலவின் சம ஈர்ப்பு விசை புள்ளி பகுதியில் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, புவி நீள் சுற்றுவட்டப் பாதையில் முதல் சுற்றை விண்கலம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இதையடுத்து, உந்து விசை வயிலாக 2ஆவது சுற்றுப்பாதைக்கு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விண்கலம் சிறப்பாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios