சந்திரயான்-3 விண்கலம் எங்கு உள்ளது? விண்ணில் நடந்த அதிசய காட்சிகள் வெளியீடு!

சந்திரயான்-3 விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது

ISRO shares On board video from Chandrayaan3 how the parts are separated and where it is

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3 திட்டத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது. அதன்படி, சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம்-3 ஆனது, ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்ட் 23 அல்லது 24ஆம் தேதியில் சந்திரயானின் லேண்டர் கலனை மென்மையாக  தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து செல்லும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

அதன்படி, சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்ட 16 நிமிடங்களில் புவி நீள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. முன்னதாக, ராக்கெட்டில் இருந்து  விண்கலம் பிரிந்து செல்லும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில், ராக்கெட் பாகங்கள் விழும் காட்சி, விண்கலம் பிரியும் காட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ விண்ணில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

புவி நீள் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் விண்கலத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து வருகின்றனர். பூமியை 5 முறை சுற்றிய பின்னர், புவி மற்றும் நிலவின் சம ஈர்ப்பு விசை புள்ளி பகுதியில் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, புவி நீள் சுற்றுவட்டப் பாதையில் முதல் சுற்றை விண்கலம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இதையடுத்து, உந்து விசை வயிலாக 2ஆவது சுற்றுப்பாதைக்கு விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விண்கலம் சிறப்பாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

பூமிக்கு அருகே 173 கி.மீ தொலைவிலும், பூமிக்கு அப்பால் 41762 கி.மீஇ தொலைவிலும் உள்ள பாதையில் தற்போது விண்கலம் சுற்றி வருகிறது. இன்னும் 40 நாட்கள் பயணிக்கும் சந்திரயான்-3 விண்கலத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி மென்மையாக தரையிறக்க திட்ட இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. முதலில் லேண்டர் தரைம் இறக்கியதும் அதிலிருந்து இறங்கும் ரோவர் ஆராய்ச்சிக்கு தேவையான தகவலை திரட்டுவதுடன், இந்திய தேசிய சின்னமான அசோக சக்கர சின்னம் மற்றும் இஸ்ரோவின் சின்னத்தை நிலவில் பதிக்கும். ரோவரின் பின்பக்க காலில் இந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

Chandrayaan 3: நிலவின் தென்துருவத்தில் என்ன இருக்கிறது? ஏன் இஸ்ரோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?

நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய சந்திரயான்2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தியது. ஆனால், நிலவில் சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி தரையிறங்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதியது. அதேசமயம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த ஆர்பிட்டரானது நிலவை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்படுகிறது.

சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள ரோவர் நிலவின் நிலப்பரப்பில் சுற்றி, அதை பகுப்பாய்வு செய்யும். அதில், கிடைக்கும் தகவல்கள் ரோவரிலிருந்து லேண்டருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தத் தரவுகள் நிலவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்கனவே சுற்றிக் கொண்டிருக்கும் சந்திரயான்-2 ஆர்பிட்டருக்கு அனுப்பப்படும். அங்கிருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு இந்தத் தரவுகள் வந்தடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios