Asianet News TamilAsianet News Tamil

ukraine russia: crude oil price: உக்ரைனின் ரத்தத்தை விலை கொடுத்து வாங்கும் இந்தியா: உக்ரைன் அமைச்சர் காட்டம்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, உக்ரைனின் ரத்தத்தை இந்தியா வாங்குவதற்கு சமம் என்று உக்ரைன் வெளியுறவுதுறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

By purchasing Russian crude oil, India is buying Ukrainian blood,' says Foreign Minister Dmytro Kuleba.
Author
New Delhi, First Published Aug 18, 2022, 9:38 AM IST

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, உக்ரைனின் ரத்தத்தை இந்தியா வாங்குவதற்கு சமம் என்று உக்ரைன் வெளியுறவுதுறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர் இன்னும் விட்டகுறை, தொட்டகுறையாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் வெறியாட்டத்தைக் கண்டித்த உலக நாடுகள் அந்நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை உள்ளிட்ட கடும் நெருக்கடிகளை அளித்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து எந்தப்பொருட்களையும் இறக்குமதி செய்ய ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா தடை விதித்துள்ளன.

இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே..வெளியான அதிர்ச்சி தகவல் - எப்போது தெரியுமா ?

இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து விலைவாக கச்சா எண்ணெய் கிடைப்பதால் அங்கிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. 

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா நேற்று காணொலி வாயிலாகப் தி இந்து நாளேட்டுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 “ உண்மையில் இந்தியாவுக்கு உக்ரைன் சிறந்த கூட்டாளி. ஆனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயையை இந்தியா வாங்குவதன் மூலம், இந்தியா உக்ரைனின் ரத்தத்தை விலைகொடுத்து வாங்குவதற்கு சமம். 

இலங்கையில் சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பல்: தெரியாத 10 விஷயங்கள்

ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெயையை இந்தியா வாங்குகிறது. உண்மையில் இந்தியா ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்,ரஷ்யா அளிக்கும் அந்தச்சலுகை, தள்ளுபடி என்பது உக்ரைன் ரத்தத்தின் ஒருபகுதி. உக்ரைன் ரத்தத்துக்குத்தான் இந்தியா விலை கொடுக்கிறது. 

நாங்கள் இந்தியாவிடம் நட்பாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறோம். உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறவதற்கு நான் தனிப்பட்ட முறையில் உதவியாக இருந்தேன். இந்தியாவிடம் இருந்து வெளிப்படையாகவே எங்களுக்கு கூடுதல் ஆதரவை எதிர்பார்க்கிறோம்

இந்தியாவும் உக்ரைனும் சிறந்த ஜனநாயக நாடுகள், பல்வேறு ஜனநாயக ஒற்றுமைகள் உள்ளன. இந்த இரு ஜனநாயக நாடும், ஒன்றோடு ஒன்று தோள்கொடுத்து நிற்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இவ்வாறு குலேபா தெரிவித்தார்

‘மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப்போறேன்’: நெட்டிஸன்களை குழப்பிய எலான் மஸ்க்

முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில் “ கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு காரணமே இல்லாமல் உயர்ந்து வருகிறது. ஆசிய நாடுகளுக்கு  பாரம்பரியமாக சப்ளை செய்துவரும் நாடுகள் திடீரென ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளையை திருப்பிவிட்டார்கள்.

 கச்சா எண்ணெய் விலை உயர்விலிருந்து தப்பிக்கவும், தீர்வுகாணவும் ஒவ்வொரு நாடும் முயற்சிக்கின்றன. உக்ரைன் ரஷ்யாப் போரால் உலக நாடுகள் அனைத்துக்கும் கச்சா எண்ணெய் விலை பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இந்தியா தற்காப்பு வழியைத் தேர்ந்தெடுக்கவி்ல்லை. 

வெளிப்படையாகவே, எங்களின் நலனுக்கான செயலில்தான் இறங்கியுள்ளோம்.  எனக்கு எங்கள் மக்கள் பெட்ரோல், டீசலுக்கு அதிக விலை தரக்கூடியவர்கள் அல்ல. உலக நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் தொடர்பாக சிறந்த ஒப்பந்தத்தை அவர்களுக்குப் பெற்றுத் தருவது எனது கடமை” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios