புதன்கிழமை இரவு அல்-குட்ஸ் மருத்துவமனை அருகே தாக்குதல் நடைபெற்ற இடத்தின் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

காசா நகரத்தில் உள்ள அல்-அரபி மருத்துவமனையில் தாக்குதல் நடந்த 24 மணிநேரத்தில் மீண்டும் மற்றொரு மருத்துவமனையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள அல்-குட்ஸ் மருத்துவமனை அருகே அக்டோபர் 18 புதன்கிழமையன்று இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்று பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் (PRCS) தெரிவித்துள்ளது. புதன்கிழமை இரவு அல்-குட்ஸ் மருத்துவமனை அருகே தாக்குதல் நடைபெற்ற இடத்தின் காட்சிகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இஸ்லாமிய ஜிஹாத் என்றால் என்ன? காசா மருத்துவமனை தாக்குதலுக்கு குற்றம்சாட்டப்படுவது ஏன்?

Scroll to load tweet…

ராக்கெட் தாக்குதல் நடந்த இடத்தில் கட்டிடம் சேதமடைந்துள்ளதாகவும் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 100 மீ தொலைவில் தான் அல்-குட்ஸ் மருத்துவமனை உள்ளது என்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை கூறுகிறது.

Scroll to load tweet…

காசாவின் பாலஸ்தீன பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலும் ஹமாஸும் மாறிமாறி குற்றம்சாட்டிய நிலையில் மறுதினமே மற்றொரு தாக்குதல் நடந்துள்ளது.

காசா மருத்துவமனை தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஜோ பைடன் ஆதரவு!