South West Airlines : சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், போயிங் 737 விமானம் ஒன்று புறப்படும் போது, அதன் எஞ்சின் வெடித்து கிழிந்த திகிலூட்டும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலோராடோவின் டென்வரில் இருந்து ஹூஸ்டனுக்குச் சென்ற அந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல தனது பயணத்தை துவங்கியது. அந்த விமானம் புறப்பட்ட 25 நிமிடங்களுக்கு பிறகு ஏற்பட்ட இந்த பரபரப்பு சம்பவத்தால், விமானியின் சாதுர்யத்தால், டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த விமானத்தில் 150 பயணிகள் மற்றும் பணியாளர்கள், விமானத்தின் என்ஜின் கவர் வெடித்தபோது 'வெடிகுண்டு அதிர்வு' போன்ற ஒரு உணர்வை அனுபவித்ததாக சம்பவத்தை நேரில் கண்டா சாட்சிகள் அந்நாட்டு செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ''எனக்கு எதிரே உள்ள இருக்கையில் இருந்தவர்கள் விமானப் பணிப்பெண்களிடம் உயிர் பயத்தில் கத்தியது தனக்கு நினைவிருப்பதாக" அவர் கூறினார். 

யாரும் பார்க்காத ஆறாவது பெருங்கடல் கண்டுபிடிப்பு.. ஆனால் யாராலும் போக முடியாது.. ஏன் தெரியுமா?

அந்த வெடிப்பு ஏற்பட்ட உடனே, நாங்கள் புறப்பட்ட இடத்தை நோக்கி திரும்பி முழு வேகத்தில் தரையிறங்கினோம். உண்மையில் அந்த விமானத்தின் விமானிகள் தரையிறங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டனர்,'' என்று ஒரு பயணி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், அந்த விமானம் தரை இறங்கிய பிறகு, வெடித்த என்ஜின் கவரை காணமுடிந்தது. 

"Southwest Airlines இன்று காலை டென்வர் சர்வதேச விமான நிலையத்திற்குத் திரும்பியது மற்றும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பத்திரமாக தரையிறங்கியது. அதில் பயணம் செய்யவிருந்த பயணிகள் மற்றொரு விமானத்தில் ஹூஸ்டன் ஹாபிக்கு வருவார்கள், சுமார் மூன்று மணிநேரம் தாமதமாகிவிட்டதற்காக நாங்கள் வருந்துகிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Scroll to load tweet…

ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் கூறுகையில், விமானத்தின் என்ஜின் கவுலிங் எனப்படும் ஒரு பகுதி பிரிந்து விமானத்தின் இறக்கை மடிப்புகளில் ஒன்றைத் தாக்கியுள்ளது. அமெரிக்க விமான ஒழுங்குமுறை அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவை மிரட்டிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ஆட்டம் கண்ட சுதந்திர தேவி சிலை!