Asianet News TamilAsianet News Tamil

ஜாலியா டூர் போயிட்டு வாங்க.. மொத்த செலவும் என்னோடது - 1200 ஊழியர்களை Disneylandக்கு அனுப்பிய அதிசய முதலாளி!

பொதுவாக தங்களிடம் வேலை செய்யும் பணியாளர்களுக்கு பண்டிகை காலங்களில் போனஸ் வழங்குவது பல முதலாளிகளின் வாடிக்கையான ஒரு செயல் தான். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர், அவருடைய நிறுவனத்தில் பணி செய்யும் நபர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

Billionaire Boss Ken Griffin sends his 1200 employees on 3 day tour for disneyland all expenses included ans
Author
First Published Oct 31, 2023, 7:41 PM IST

உலகெங்கிலும் உள்ள பல ஊழியர்களுக்கு பின்வரும் இந்த சம்பவம் கேட்பதற்கு ஒரு கனவாக போல தோன்றலாம். ஆம், அமெரிக்காவை சேர்ந்த பில்லியனர் முதலாளி, தன்னிடம் பணிசெய்யும் 1200 பணியாளர்களுக்கு டோக்கியோவில் உள்ள டிஸ்னிலேண்டிற்கு சென்று வர அவரது செலவில் டூர் ஏற்பாடு செய்துள்ளார். மல்டிநேஷனல் ஹெட்ஜ் ஃபண்ட் சிட்டாடல் எல்எல்சியின் தலைமை நிர்வாக அதிகாரியும், சிட்டாடல் செக்யூரிட்டிஸின் நிறுவனருமான கென் க்ரிஃபின் தான் அந்த அதிசய முதலாளி. 

டோக்கியோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்டில் மூன்று நாட்கள் தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிட தன்னிடம் பணியாற்றும் 1,200 ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் டூர் ஏற்பாடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஹாங்காங், சிங்கப்பூர், சிட்னி, ஷாங்காய், டோக்கியோ மற்றும் இந்தியாவின் குருகிராம் ஆகிய ஆறு அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வந்திருந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மீண்டும் அதே தவறு.. பாலியல் தொழில் செய்பவருக்கு பணம் கொடுக்க மறுத்த சிங்கப்பூரர் - கடுப்பான சிங்கை கோர்ட்!

அதிலும் அத ஊழியர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் டோக்கியோ டிஸ்னிலேண்ட் மற்றும் டிஸ்னிசீ இரண்டையும் பார்வையிட்டனர். இதற்கிடையில், அந்த 1200 பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கான பயணம், ஹோட்டல்கள், உணவு, டிஸ்னி டிக்கெட்டுகள், பொழுதுபோக்கு மற்றும் குழந்தை பராமரிப்புக்கான அனைத்து செலவுகளையும் அந்த முதலாளியே ஏற்றுக்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக, டிஸ்னியில் தனது ஊழியர்கள் யாரும் வரிசையில் நின்று அங்குள்ள விஷயங்களை அனுபவிக்க கூடாது என்பதற்காக அனைவருக்கும் VIP பாஸ் கொடுத்துள்ளார் என்பது தான் ஹலைட்.

தனது நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டத்திற்காக இந்த சலுகையை வழங்கிய அவர் கடந்த ஆண்டு டிசம்பரில், தனது அமெரிக்க, கனேடிய மற்றும் ஐரோப்பிய ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் இதைச் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வெற்றிகரமான ஆண்டைக் கொண்டாடுவதற்காக அவர் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக முழு டிஸ்னி வேர்ல்ட்டையும் பதிவு செய்துள்ளார். 

ஹமாஸ் பயங்கரவாதிகளால் சித்ரவதை செய்யப்பட்ட ஜெர்மன் டாட்டூ கலைஞர்.. இரங்கல் தெரிவித்த இஸ்ரேல் !!

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, கென் கிரிஃபினின் சொத்து மதிப்பு சுமார் $35.4 பில்லியன் ஆகும். சிட்டாடல் மற்றும் சிட்டாடல் செக்யூரிட்டீஸ் கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளன, இப்போது ஆசியாவில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios