பன்றி குட்டிகளின், விதைப்பைகளை அறுக்கும் கொடூரம்..!! நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பீட்டா..!!
அதனுடைய விதைப்பைகளை அகற்றிவிட்டால் துர்நாற்றம் வராது என்ற நம்பிக்கையில் பன்றி குட்டிகளின் விதைப்பைகளை அகற்றி வருகின்றனர் .
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பு தற்போது பன்றி குட்டிகளுக்காக ஜெர்மனி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது . எதற்காக என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் , பன்றி குட்டிகளுக்கு கருத்தடை செய்யப்படுவதை எதிர்த்து பன்றி குட்டிகளின் பெயரில் பீட்டா இந்த வழக்கை தொடுத்துள்ளது..
அதாவது நார்வே , ஸ்வீடன் போன்ற நாடுகளில் நன்கு வளர்ந்த பன்றிகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. பருவமடைந்த ஆண் பன்றிகளை சமைக்கும்போது அதிலிருந்து ஒருவித கெட்ட வாடை வெளியேறிவருகிறது. ஆண் பன்றிகள் குட்டியாக இருக்கும்போதே அதனுடைய விதைப்பைகளை அகற்றிவிட்டால் துர்நாற்றம் வராது என்ற நம்பிக்கையில் பன்றி குட்டிகளின் விதைப்பைகளை அகற்றி வருகின்றனர் . அப்படி அந்த விதைப்பைகளை அகற்றும்போது பல இடங்களில் மயக்கமருந்து கூட கொடுக்காமல் துடிக்கத் துடிக்க அறுத்து நீக்குகின்றனர் . இதுவரையில் கடந்த 2013 ஆம் ஆண்டு பன்றி குட்டிகளுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கருத்தடை செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
அத்துடன் அதனை நடைமுறைப்படுத்த ஐந்து ஆண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த அவகாசம் காலம் முடிந்தும் இதுவரையிலும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவில்லை , இதனால் ஆத்திரமடைந்த பீட்டா அமைப்பைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் , பன்றிக்குட்டிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர் . இந்த பீட்டா அமைப்பு ஏற்கனவே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தடுத்து நிறுத்தும் நோக்கில் காளைகள் வதை செய்யப்படுகிறது என வழக்கு தொடுத்த அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது
.