பங்களாதேஷ் தலைநகர் டாக்கா உணவகத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 11பேர், அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்‍கையின்போது சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதியன்று அங்குள்ள உணவகத்திற்குள் தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்து நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய பெண் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்‍குதல் தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், டாக்கா நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்‍ கொல்லப்பட்டனர். அவர்கள், டாக்‍கா உணவகத் தாக்‍குதலுக்‍கு பொறுப்பேற்றுள்ள Jamaat-ul-Mujahideen தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பங்களாதேஷ் போலீசார் தெரிவித்துள்ளனர்.