கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை !! இயேசு பிறப்பைக் கொண்டாடினால் 5 ஆண்டுகள் சிறை !!

முஸ்லீம் நாடுகளான சோமாலியா, புருனே உள்ளிட்டவை தங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடை விதித்துள்ளன. மீறுவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளன.

ban chrismas in somalia and brune

கிறிஸ்துமஸ் இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் தினம் ஆகும். உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்த விழா டிசம்பர் 25 ல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
இந்நிலையில், சோமாலியா அரசு தங்கள் நாடு முஸ்லீம் நாடு என்றும், அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட கூடாது என்றும் தெரிவித்துள்ளது. 

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாட்டின் முஸ்லீம் நம்பிக்கையை அச்சுறுத்தி வருவதாக சோமாலியாவின் மத விவகார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் ஷேக் முகமது கெய்ரோ  கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

ban chrismas in somalia and brune

கடந்த ஆண்டு,  கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆயுதக் குழு  ஒன்று தலைநகர் மொகாடிஷுவில் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தியது. அதில்  மூன்று வீரர்கள் மற்றும் ஒரு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் அரசு மட்டுமல்லாமல்  அல் ஷபாப் என்கிற அல் கொய்தா ஆதரவு தீவிரவாத அமைப்பு விடுத்த மிரட்டல் எதிரொலியாகவும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அந்த நாடு தடை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ban chrismas in somalia and brune

அதே நேரத்தில் வெளிநாட்டு  தூதர்கள் மற்றும் அரசு ரீதியிலான வெளிநாட்டு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தங்கள் வீடுகளுக்குள் கிறிஸ்துமஸ் கொண்ணடாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ban chrismas in somalia and brune

அதேபோல், புருனே நாட்டிலும், கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி தங்கள் மத கொள்கைகளுக்கு ஒத்து வராத செயல்களில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புருனே அரசு தெரிவித்துள்ளது. அதாவது 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்துமஸ் மரங்களை வைக்கவோ, பள்ளிகளில் பரிசு பொருட்களை வழங்க வோ கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios