பிரதமர் நரேந்திரமோடி முதல்முறையாக பக்ரைனுக்கு வருகை புரிந்ததை கவுரவிக்கும் வகையில், அந்நாட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 250 கைதிகளை விடுதலைசெய்ய அந்நாடு முன்வந்துள்ளது. இது மோடியின் பயணதிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

5 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரான்ஸ் நாட்டுப்ப பயனத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்ற அவர் . அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யனை சந்தித்தார் பின்னர் இருநாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பின்னர் அங்கிருந்து பஹ்ரைன் நாட்டுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை  பஹ்ரைன் நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மான் அல் கலிபா  வரவேற்றார், பின் முதல்முறையாக தங்கள் நாட்டுக்கு வருகைதந்த பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையிலும் இந்தியா பஹ்ரைட் இடையே வலுவான உறவை மலரச்செய்த பிரதமர் மோடியை பாராட்டியும்  அவருக்கு பஹ்ரைன் நாட்டின் உயரிய விருதான  அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சி விருது அளிக்கப்பட்டது. 

பின்னர் அது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவத்திருந்த பிரதமர் மோடி, பக்ரைன் நாட்டு அரசு வழங்கிய  அரசர் ஹமாத்தின் மறுமலர்ச்சி விருதை தலைவணங்கி ஏற்கிறேன், இந்தியாவுடனான விலிமையான நட்புறவுக்கு அடையாலமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பக்ரைன் நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள்,மற்றும் உறவு என்றென்றும் நிலைத்திருப்பவை பஹ்ரைன் நாட்டின் கவனிப்பு மற்றும் அவர்கள் வழங்கிய கவுரவம் மிக சிறப்பாக இருந்தது  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதனிடையே பிரதமர் மோடி சந்திப்பின் எதிரொலியாக நல்லெண்ண அடிப்படையில் பஹ்ரைன் நாட்டுச்சிறையில் வாடும்  இந்தியக்கைதிகள் சுமார் 250 பேரை விடுவிக்க பகைரைன் அரசர் உத்தரவிட்டுள்ளார்.  என்பது  குறப்பிட தக்கது,  பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,  ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பஹ்ரைன் ஆகிய  இரு இஸ்லாமிய நாடுகளில்  பிரதமர் மோடி மேற்கொண்ட பயணம் வெற்றியடைந்துள்ளது.