பாபா வங்காவின் 2024ம் ஆண்டுக்கான கணிப்புகள் - மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உண்மையாகிய அதிசயம்! ஒரு பார்வை!
Baba Vanga Predictions : இந்த 2024ம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று பாபா வங்கா முன்னறிவித்ததாக கூறப்படுகிறது.
பார்வையற்ற பல்கேரிய மாயவாதி பாபா வங்கா தனது வாழ்நாளில் பல கணிப்புகளைச் செய்ததாக நம்பப்படுகிறது, அதே நேரத்தில் அது உண்மையாகிவிட்டது என்று பலர் கூறுகிறார்கள். பால்கனின் நோஸ்ட்ராடாமஸ் என்றும் அழைக்கப்படும் பாபா வங்கா, 9/11 பயங்கரவாத தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரெக்ஸிட் போன்ற முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாக கூறப்படுகிறது.
அதே போல இந்த 2024ம் ஆண்டுக்கான பல தீர்க்கதரிசனங்களைச் அவர் ஏற்கனவே கணித்துள்ளதாக கூறப்படுகிறது, அதே போல அவற்றில் சில இப்போது உண்மையாகிவிட்டன என்றும் நம்பப்படுகிறது. ஜப்பான் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பொருளாதார நெருக்கடி மற்றும் ரஷ்யாவால் புற்றுநோய் தடுப்பூசி உருவாக்கம் ஆகியவை அதில் அடங்கும்.
அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளிக் குடும்பம்.. வெளியான பகீர் தகவல்.!
ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி
புற்றுநோய்க்கான தடுப்பூசியை விரைவில் நோயாளிகளுக்குக் கிடைக்கக்கூடிய தடுப்பூசியாக உருவாகும் அந்த நிலையில் ரஷ்ய விஞ்ஞானிகள் நெருங்கிவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் கூறினார். "புதிய தலைமுறையின் புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகள் என்று அழைக்கப்படுவதை உருவாக்குவதற்கு நாங்கள் மிக அருகில் வந்துவிட்டோம்" என்று கூறியுள்ளார்.
"விரைவில் அவை தனிப்பட்ட சிகிச்சையின் முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார், எதிர்கால தொழில்நுட்பங்கள் குறித்த மாஸ்கோ மன்றத்தில் அவர் பேசினார். இருப்பினும், இந்த முன்மொழியப்பட்ட தடுப்பூசிகள் எந்த வகை புற்றுநோய்களை எதிர்த்து உருவாக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிடவில்லை.
ஜப்பான் மற்றும் UK பொருளாதார நெருக்கடி
2024 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி இருக்கும் என்றும் பாபா வங்கா முன்னறிவித்ததாக கூறப்படுகிறது. கடன் அளவுகள் அதிகரிப்பு மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரிப்பது போன்ற காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
அதே போல குறிப்பிடத்தக்க வகையில், அதிக பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து மந்தநிலையில் மூழ்கியது. இந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு பிரதம மந்திரி ரிஷி சுனக்கிற்கு ஒரு அடியாக அது இருந்தது. அந்நாட்டு ஊடகங்கள் அளித்த தகவலின்படி முந்தைய மூன்று மாதங்களில் 0.1 சதவிகிதம் சுருங்கிய பின்னர் 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3 சதவிகிதம் சுருங்கியுள்ளது.
அதே போல ஜப்பானின் பொருளாதாரமும் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக சுருங்கி வருகின்றது. 2023 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவிகிதம் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜெர்மனியை விட கீழே சரிந்து உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்கள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது.
பாபா வங்காவின் வேறு சில கணிப்புகள்
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து எச்சரித்த அவர், "பெரிய நாடு" அடுத்த ஆண்டு உயிரியல் ஆயுத சோதனைகள் அல்லது தாக்குதல்களை நடத்தும் என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டு பயங்கரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் இருக்கும் என்று பாபா வங்கா முன்னறிவித்தார்.
சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும், மேம்பட்ட ஹேக்கர்கள் பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பை குறிவைப்பார்கள், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீது சக நாட்டுக்காரர் ஒருவரால் கொலை முயற்சி செய்யப்படும் என்று முன்னறிவித்துள்ளார்.
திவாலானது மாலத்தீவு.. சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை வைத்த மாலத்தீவு அரசு..